ஓய்வு அரசு ஊழியரிடம் ரூ.28.50 லட்சம் மோசடி: கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியரை டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ரூ.28.50 லட்சம் மோசடி செய்த கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி, தச்சநல்லுார் அருகே சேந்திமங்கலத்தை சேர்ந்தவர் அனந்தப்பன் 61. அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
அக்.6ம் தேதி இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை மும்பை தேசிய புலனாய்வு முகமை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். அனந்தப்பனிடம், உங்கள் அலைபேசி எண்ணைப் பயன்படுத்தி 6 மாநிலங்களில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நக்சல் அமைப்பினருக்கு பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது, எனக்கூறி மர்ம நபர் மிரட்டினார்.
மறுநாள் போலீஸ் சீருடையில் வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பில் பேசிய மற்றொரு நபர், அனந்தப்பனை டிஜிட்டல் கைது செய்வதாகக் கூறினார்.
தொடர்ந்து இந்த மர்ம கும்பல் அனந்தப்பனை மிரட்டி அவரது வங்கி கணக்கு மற்றும் சேமிப்பு விபரங்களை பெற்றது. பின் அவரிடம் இருந்து ரூ.28.50 லட்சத்தை மோசடி செய்தனர்.
பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனந்தப்பன், திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.
போலீசார் விசாரணையில், கேரளாவைச் சேர்ந்த ரவிக்குமார் 52, தினேஷ் 52, அப்துல் சமது 50, ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவுக்குச் சென்று மூவரையும் கைது செய்தனர்.
மேலும்
-
மேலுாரை வறட்சி பகுதியாக அறிவிக்கணும்: விவசாயிகள் வலியுறுத்தல்
-
தாய்மாமன் தங்க மோதிரம் 110 குழந்தைகளுக்கு வழங்கல்
-
மயில்களின் பெருக்கம் ‘நரி’ இல்லாதது காரணம்
-
தினமலர் எதிரொலி கணித பூங்கா பிரச்னைக்கு கிடைத்து விட்டது தீர்வு
-
560 கிலோ பட்டாசு பறிமுதல்
-
பட்டாபிராமில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்