பிச்சாவரத்தில் காட்டேஜ் இல்லையே? சுற்றுலா பயணிகள் ஏக்கம்... வனத்துறை கருணை காட்டுமா
சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், உலக புகழ் பெற்ற வனச்சுற்றுலா மையம் உள்ளது.இங்கு, சதுப்பு நிலக்காடுகளுடன் இயற்கை சூழலுடன், மருத்துவ குணம் கொண்டசுரபுண்ணை எ்னும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால், உலக அளவில் இந்த சுற்றுலா மையம் சிறப்பு வாய்ந்தது.பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்துஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைந்துசெல்கின்றனர். விடுமுறை தினங்கள், கோடை காலங்களில் ஆயிரக்கணக்கில்சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.சுற்றுலா பயணிகள் வனக்காடுகளை சுற்றிபார்க்க வசதியாக தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சி கழகம் சார்பில், இயந்திர படகுகள், துடுப்பு படகுகள் மற்றும் பிச்சாவரம் சூழல் சுற்றுலா மேலாண்மைக்குழு மூலம் படகுகள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.பிச்சாவரம் சுற்றுலா வருபவர்கள், காடுகளுக்கு மத்தியில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்த காட்டேஜ் (தங்கும் விடுதி) தங்கி செல்வார்கள்.ஆனால், காட்டேஜ் பழுந்தடைந்ததால் கடந்த 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல்உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றுமடைந்து வருகின்றனர்.
வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், சுற்றுலாத்துறை காட்டேஜ் கட்டி, சுற்றுலாபயணிகள் தங்குவதற்கான வசதிகளை செய்திருந்த நிலையில், சேதமடைந்தகாட்டேஜை அகற்றிவிட்டு புதியதாக கட்ட சுற்றுலாத்துறைக்கு, வனத்துறை அனுமதி தரவில்லை. இதனால், காட்டேஜ் கட்டுவதில் பல ஆண்டாக தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதனால், காட்டேஜில் தங்கி ஓய்வு எடுக்கலாம் என்று ஆர்வத்துடன் வரும்சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
தற்போது, பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்த பணிகள் நடந்துவரும் நிலையில், காட்டேஜ் அமைத்து கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.