சவுதியில் இறந்த கணவர் உடலை மீட்க கோரி மனு

கடலுார்: சவுதி அரேபியாவில் இறந்த கணவர் உடலை மீட்டு தரக் கோரி மனைவி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து கடலுாரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் பரங்கிப்பேட்டை, புதுப்பேட்டையைச் சேர்ந்த லோகேஸ்வரி அளித்த மனு:எனது கணவர் வாழ்முனி,36; சவுதி அரேபியாவில் கடந்த 7 ஆண்டுகளாக மீன்பிடி தொழில் செய்து வந்தார். விடுமுறையின் போது, சொந்த ஊர் வந்து சென்றார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரில் இருந்து மீண்டும் சவுதி அரேபியா சென்றார். இந்நிலையி்ல், அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த 3ம் தேதி இறந்து விட்டதாக அவரது நண்பர் மூலமாக எனக்கு தகவல் கிடைத்தது. கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எனது கணவர் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement