புற்று நோய் பாதித்த இளைஞர் தற்கொலை
புதுச்சேரி: புற்று நோயால் அவதிப்பட்ட வாலிபர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
லாஸ்பேட்டை ஆனந்தா நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு மகன் சக்திவேல்,43; இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொண்டை புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், பேசமுடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்குப்போட்டுக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சக்திவேல் மனைவி ரேவதி புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேலுாரை வறட்சி பகுதியாக அறிவிக்கணும்: விவசாயிகள் வலியுறுத்தல்
-
தாய்மாமன் தங்க மோதிரம் 110 குழந்தைகளுக்கு வழங்கல்
-
மயில்களின் பெருக்கம் ‘நரி’ இல்லாதது காரணம்
-
தினமலர் எதிரொலி கணித பூங்கா பிரச்னைக்கு கிடைத்து விட்டது தீர்வு
-
560 கிலோ பட்டாசு பறிமுதல்
-
பட்டாபிராமில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
Advertisement
Advertisement