கட்டியும் திறக்காத அங்கன்வாடி மையம் :சமூக விரோதிகளின் கூடாரமாகும் அவலம்

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே வாகைகுளம் பட்டியில் பயன்பாட்டிற்கு வரும் முன்பே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் அங்கன்வாடி மையத்தை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் எஸ்.ராமலிங்காபுரம் ஊராட்சி வாகைகுளம் பட்டியில் செயல்பட்டு வந்த அங்கன் வாடி மைய கட்டடம் பழுதடைந்ததது. இதனால் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.20 லட்சத்தில் ஏற்கனவே இருந்த இடத்தில் புதிதாக கட்டபட்டது,

கட்டுமான பணிகள் முடிந்து 4 மாதம் கடந்த நிலையில் இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. புதிய கட்டடத்திற்கு கதவுகள் அமைக்காததால் இரவு நேரங்களில் திறந்த வெளி பார் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகிறது. இது தவிர ஏற்கனவே அமைக்கப்பட்ட பொருட்கள் சேதம் அடைவதால் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை புதிய கட்டடத்திற்கு இடமாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement