நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் நவராத்திரி கொண்டாட்டம்

-சிறப்பு நிருபர்-


ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 9 நாட்கள் உற்சாகமாக கொண்டாட்டம் நடக்கும். கோல்கட்டாவில் முன்பு இல்லாத வகையில் நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டன. குஜராத்திலும் துவங்கியது.

இந்நிலையில், வெளிநாடுகளிலும் நவராத்திரியை ஹிந்துக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நவராத்திரி கொண்டாட்டம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியது. இந்திய பாரம்பரிய உடை அணிந்து வந்த இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் கர்பா நடனமாடி நவராத்திரியை உற்சாகமாக கொண்டாடினர். இதனை பார்த்தவர்கள், கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குஜராத்தில் நவராத்திரி பண்டிகையை கர்பா நடனமாடி கொண்டாடுவது வழக்கம். அதேபோல், டைம்ஸ் சதுக்கத்திலும் கொண்டாடியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement