அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவி மாநில போட்டிகளுக்கு தேர்வு
ஓசூர்: ஓசூர் அருகே, 10ம் வகுப்பு படிக்கும் மாணவி, மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, மாநில போட்டிகளுக்கு தேர்வாகி உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த மூக்கண்டப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிப்பவர் வித்யாஸ்ரீ, 15. இவர் மாவட்ட ஓட்டப்பந்தய போட்டிகளில் தனிப்பட்ட சாம்பியன் பட்டம் பெற்று, மாநில போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
மூக்கண்டப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
எங்கள் பள்ளி மாணவி வித்யாஸ்ரீ, ஓட்டப்பந்தயத்தில் தொடர் சாதனை படைத்து வருகிறார். மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற அவர், 400 மீ., 800 மீ., 1,200 மீ., ஓட்டப்பந்தயங்களில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம், அவர், மாநில போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இம்மாணவி இம்முறை மட்டுமில்லாமல், இரு ஆண்டுகளாக மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகளில் ஓட்டப்பந்தயத்தில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்.
கடந்த, 2024ல், 14 வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு, 14வது இடத்தை பிடித்த அவர், கடந்தாண்டு, 6ம் இடம் பிடித்தார். தற்போது, கடும் பயிற்சி மேற்கொண்டுள்ள நிலையில், நடப்பாண்டில் அவர், மாநில அளவில் சாதனை படைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
அரசு மருத்துவமனை கட்டடங்களுக்கு வயசாகிப்போச்சு: மாற்று ஏற்பாடு இல்லாததால் நெருக்கடி
-
ரயில்வே சுரங்கப்பாதை அமைத்தால் 2 கி.மீ. துாரம் சுற்றுவது மிச்சமாகும்
-
அரசு மருத்துவமனை அருகில் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்
-
பட்டம் வினாடி வினா எதிலும் ஆர்வம் இருந்தால் மேலே வரலாம்: ஆச்சாரிய கல்வி குழும தலைவர் அரவிந்தன ‘அட்வைஸ்’
-
வீடு ஒப்படைக்காத கட்டுமான நிறுவனம் ரூ.17 லட்சத்தை வட்டியுடன் தர உத்தரவு
-
ரஞ்சி கோப்பை: ராஜஸ்தான் 170 ரன்கள் முன்னிலை