பேரிடர் அபாய குறைப்பு தின விழிப்புணர்வு முகாம்
விழுப்புரம்: மத்திய அரசின் மேரா யுவ பாரத் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் பேரிடர் அபாய குறைப்புக்கான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாயில் நடந்த நிகழ்ச்சிக்கு, தீயணைப்பு அலுவலர் ஜமுனா ராணி தலைமை தாங்கினார்.
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன் முன்னிலை வகித்தார். பேரிடர் மேலாண்மை மாநில பயிற்றுநர்கள் விக்டோரியா ராணி, தவமணி பேரிடர் மேலாண்மை குறித்து சிறப்புரையாற்றினர். இதில், பேரிடர் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் கால செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது, தேசிய தன்னார்வத் தொண்டர்கள் நவீன்குமார், செந்தில்குமார் உட்பட மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். பல்நோக்கு பணியாளர் காந்தி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பா? மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் நோட்டீஸ்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
Advertisement
Advertisement