பட்டம் வினாடி வினா எதிலும் ஆர்வம் இருந்தால் மேலே வரலாம்: ஆச்சாரிய கல்வி குழும தலைவர் அரவிந்தன ‘அட்வைஸ்’
ஸ்ரீமுஷ்ணம்: ‘எந்த ஒரு செயலில் ஆர்வம் இருந்தால் மட்டுமே மேலே வரலாம்’ என ஆச்சாரியா கல்வி குழும தலைவர் அரவிந்தன், மாணவர்களுக்கு ‘அட்வைஸ்’ செய்தார்.
ஸ்ரீமுஷ்ணம் தவஅமிர்தம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ‘தினமலர்–பட்டம்’ வினாடி–வினா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
நான் முன்பு 65 தொழில் நிறுவனங்களை நடத்தினேன். தற்போது, 27 தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறேன். நான் பள்ளி படித்த காலத்தில், ஆசிரியர்கள் என்னை வேலைக்கு ஆகாதவன் என ஏளனம் செய்தனர். அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில்தான் கல்வி நிறுவனத்தை துவங்கினேன். அதன்பின், நான் படித்த பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறந்த மாணவன் என்ற பாராட்டு பெற்றேன்.
நமக்கு ஒரு செயலில் ஆர்வம் இருந்தால் மட்டுமே மேலே வரலாம். நாம் எதிர்காலத்தை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். ‘வாட் நவ், வாட் நெக்ஸ்ட்’ என்று தொடர்புபடுத்தி யோசித்தால் உங்கள் வாழ்க்கை மாறிவிடும் என்றார். .
மேலும்
-
எம்.எல்.ஏ., பிறந்த நாள் அமைச்சர் நேரில் வாழ்த்து
-
கடலுாரில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் ஈரோடு வாலிபர்கள் 3 பேர் கைது
-
திருவதிகையில் கழிவுநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
-
ஆட்டை கொன்றது சிறுத்தை கண்ணாமூச்சி மக்கள் அதிர்ச்சி
-
ரூ.3,927 கோடி மதிப்பிலான பணிகள் ஊரக வளர்ச்சி துறையில் அனுமதி
-
மத அடிப்படையில் நடந்த பொறியாளர் மாற்றம் பொதுப்பணி துறையில் புகைச்சல்