அரசு மருத்துவமனை அருகில் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனை அருகில் நிறுத்தப்படும் வாகனங்களை போக்குவரத்திற்கு பாதிப்பில்லாமல் பார்க்கிங் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி அரசு மருத்துவமனையை அருகில், சட்டசபை, லோக்சபா எம்.பி., அலுவலகம், பாரதி பூங்கா உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன. மேலும், மருத்துவமனைக்கு நாள் தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
மேலும், விபத்து உள்ளிட்ட அவரச சிகிச்சைகளுக்காக ஆம்புலன்ஸ்களும் செஞ்சி சாலை, விக்டர் சியோமானால் வீதி வழியாக மருத்துவமனைக்கு வந்து செல்கின்றன.
இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தங்கள் இருசக்கர வாகனங்களை செஞ்சாலையில் இருந்து பாரதி பூங்கா செல்லும் சாலையின் இருபுறங்களிலும், விக்டர் சியோமனால் வீதியின் இரு புறங்களிலும் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
இதனால், அவசர தேவைகளுக்காக மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்கள் வேகமாக செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், சட்டசபை, பாரதி பூங்கா, கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் நெரிசலுடன் அப்பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, வாகனங்களை போக்குவரத்திற்கு பாதிப்பில்லாமல் முறையாக ஒரு புறம் மட்டும் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
எம்.எல்.ஏ., பிறந்த நாள் அமைச்சர் நேரில் வாழ்த்து
-
கடலுாரில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் ஈரோடு வாலிபர்கள் 3 பேர் கைது
-
திருவதிகையில் கழிவுநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
-
ஆட்டை கொன்றது சிறுத்தை கண்ணாமூச்சி மக்கள் அதிர்ச்சி
-
ரூ.3,927 கோடி மதிப்பிலான பணிகள் ஊரக வளர்ச்சி துறையில் அனுமதி
-
மத அடிப்படையில் நடந்த பொறியாளர் மாற்றம் பொதுப்பணி துறையில் புகைச்சல்