அரசு ஊழியர் சங்கம் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் ராமர் தலைமை தாங்கினார். யோகேஸ்வரன், பொற்செழியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் காசிநாதன் நிறைவுரையாற்றினார். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த, தற்காலிக, தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதிய நியமனங்களை ரத்து செய்து, கால முறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்.எல்.ஏ., பிறந்த நாள் அமைச்சர் நேரில் வாழ்த்து
-
கடலுாரில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் ஈரோடு வாலிபர்கள் 3 பேர் கைது
-
திருவதிகையில் கழிவுநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
-
ஆட்டை கொன்றது சிறுத்தை கண்ணாமூச்சி மக்கள் அதிர்ச்சி
-
ரூ.3,927 கோடி மதிப்பிலான பணிகள் ஊரக வளர்ச்சி துறையில் அனுமதி
-
மத அடிப்படையில் நடந்த பொறியாளர் மாற்றம் பொதுப்பணி துறையில் புகைச்சல்
Advertisement
Advertisement