பெருமிதம் தேசிய யோகா போட்டி குமுதா பள்ளி அசத்தல்
திருப்பூர்: தேசிய அளவிலான யோகா போட்டிக்கு குமுதா பள்ளி மாணவர் தேர்வு பெற்று அசத்தினார்.
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், மாநில அளவில் யோகாசன போட்டி சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்தது. தமிழகம் முழுதும் இருந்து, 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பஙே்கற்றனர். இப்போட்டியில், நம்பியூர், குமுதா பள்ளி பிளஸ் 1 மாணவர் கபிலேஷ், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று ஜார்கண்ட் மாநிலத்தில், 2027ம் ஆண்டு ஜன., மாதம் நடக்கும் தேசிய போட்டிக்கு தமிழக அணிக்கு தேர்வு பெற்று அசத்தினார். மாணவரை காஞ்சிபுரமர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். சாதித்த மாணவர் கபிலேஷை, நம்பியூர் குமுதா பள்ளி பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, பள்ளி செயலர் அரவிந்தன், இணை செயலர் டாக்டர் மாலினி, விளையாட்டு இயக்குநர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா உள்ளிட்டோர் பாராட்டினர்.
மேலும்
-
மேலுாரை வறட்சி பகுதியாக அறிவிக்கணும்: விவசாயிகள் வலியுறுத்தல்
-
தாய்மாமன் தங்க மோதிரம் 110 குழந்தைகளுக்கு வழங்கல்
-
மயில்களின் பெருக்கம் ‘நரி’ இல்லாதது காரணம்
-
தினமலர் எதிரொலி கணித பூங்கா பிரச்னைக்கு கிடைத்து விட்டது தீர்வு
-
560 கிலோ பட்டாசு பறிமுதல்
-
பட்டாபிராமில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்