அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மதிய உணவு இடைவேளை நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ‘டேப்ஸ்’ திட்டத்திற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உடனடியாக வெளியிட வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 2002ல் பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்கள் 41 மாத பணிநீக்க காலத்தினை நீதிமன்ற உத்தரவுப்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கலெக்டர் அலுவலக வட்டக்கிளை தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுகந்தி, மாவட்ட தலைவர் முபாரக் அலி பேசினர். வட்டக்கிளை துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.
இதே 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 தாலுகா அலுவலகங்கள், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய அலுவலகம், அரசு மருத்துவக் கல்லுாரி உள்ளிட்ட இடங்களில் உணவு இடைவேளை, மாலை நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அரசு ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.
மேலும்
-
மேலுாரை வறட்சி பகுதியாக அறிவிக்கணும்: விவசாயிகள் வலியுறுத்தல்
-
தாய்மாமன் தங்க மோதிரம் 110 குழந்தைகளுக்கு வழங்கல்
-
மயில்களின் பெருக்கம் ‘நரி’ இல்லாதது காரணம்
-
தினமலர் எதிரொலி கணித பூங்கா பிரச்னைக்கு கிடைத்து விட்டது தீர்வு
-
560 கிலோ பட்டாசு பறிமுதல்
-
பட்டாபிராமில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்