கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவ கல்லுாரிகள் மாணவர்கள், பெற்றோர் அதிருப்தி
சென்னை: த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க தயக்கம் காட்டிய, சுயநிதி மருத்துவ கல்லுாரிகள், தற்போது பழையபடி, 3 லட்சம் ரூபாய் வரை வசூலித்து வருகின்றன.
சுயநிதி மருத்துவ கல்லுாரிகளுக்கான கல்வி கட்டணத்தை, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி நிர்ணயித்துள்ளது. அதன்படி, கல்லுாரியின் தர அடிப்படையில், ஆண்டுக்கு, 12 லட்சம் முதல், 13.50 லட்சம் ரூபாய் வரை, கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டாலும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம், அரசு நிர்ணயித்த கட்டணத்துடன், கூடுதலாக, 3 லட்சம் ரூபாய் வரை கல்வி நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இந்த கூடுதல் தொகை, எவ்வித கணக்கிலும் காட்டப்படாமல் வசூலிக்கப்படுகிறது.
த.வெ.க., அரசு பொறுப்பேற்றதும், ‘கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை விடுத்தார். அத்துடன், புகார் அடிப்படையில், ஐந்துக்கு மேற்பட்ட சுயநிதி மருத்துவ கல்லுாரிகளுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டு விசாரணை நடந்தது. ஆனாலும், எந்த மருத்துவ கல்லுாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதிய அரசும், கடந்த கால அரசுகளை போல, இந்த விவகாரத்தில் செயல்படுவதால், கூடுதல் கட்டணத்தை, மருத்துவ கல்லுாரிகள் வழக்கம் போல வசூலித்துள்ளன.
இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது:
ஓரிரு மாதங்களுக்கு முன்பே, கல்விக் கட்டணம் மற்றும், 3 லட்சம் ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என, கல்லுாரியில் இருந்து குறுஞ்செய்தி வரும். ஆனால், த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின், கல்வி கட்டணம் செலுத்தும்படி அறிவுறுத்தினர். அதனால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று எதிர்பார்த்தோம். ஆனால், மாணவர்கள் வாயிலாக, வழக்கம் போல கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
அதேபோல, இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ், சுயநிதி கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்களிடம், 4.50 லட்சம் ரூபாய் தான் கட்டணம் வசூலிக்க வேண்டும். கல்லுாரியில் சேர சென்றால், 20 லட்சம் ரூபாய் வரை கேட்கின்றனர். இந்த விவகாரத்திற்கு, எப்போது தான் தீர்வு வரும் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் லோகநாயகி கூறுகையில், ‘‘கட்டண உயர்வு குறித்து புகார்கள் வந்துள்ளன. உரிய கமிட்டியிடம் ஒப்படைத்து விசாரிக்கப்படுகிறது. விதிமுறைகளை மீறி கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என, ஏற்கனவே கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.
@quote@
தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, விசாரணை நடந்தது. கல்லுாரி தரப்பிலிருந்து யாரும் வரவில்லை. மாணவர்கள் தரப்பிலிருந்து வந்திருந்தனர்.
நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக, கல்விக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதை மீறி சில கல்லுாரிகள் வசூலித்துள்ளனர். அதை மீறி வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
- அருண் ராஜ்
அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறைquote
மேலும்
-
மேலுாரை வறட்சி பகுதியாக அறிவிக்கணும்: விவசாயிகள் வலியுறுத்தல்
-
தாய்மாமன் தங்க மோதிரம் 110 குழந்தைகளுக்கு வழங்கல்
-
மயில்களின் பெருக்கம் ‘நரி’ இல்லாதது காரணம்
-
தினமலர் எதிரொலி கணித பூங்கா பிரச்னைக்கு கிடைத்து விட்டது தீர்வு
-
560 கிலோ பட்டாசு பறிமுதல்
-
பட்டாபிராமில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்