பாலியல் புகாரில் சிக்கிய காங்., – எம்.பி., மீது நடவடிக்கை கோரி ஜனாதிபதியிடம் மனு
புதுடில்லி: டில்லி ஜே.என்.யு., எனப்படும் ஜவகர்லால் நேரு பல்கலையில் மாணவியர் எழுப்பிய பாலியல் துன்புறுத்தல் புகார்களுக்கு உள்ளான பேராசிரியரும் காங்., லோக்சபா எம்.பி.,யுமான அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜாம், 59, மீது நடவடிக்கை எடுக்கும்படியும், அவரை லோக்சபாவில் இருந்து இடைநீக்கம் செய்யும்படியும் பா.ஜ., பெண் எம்.பி.,க்கள் கூட்டாக சென்று, ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்து வலியுறுத்தினர்.
டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலையில், சமூக அறிவியல் துறையி ன் கீழ் செயல்படும் சமூக அமைப்புகள் ஆய்வு மையத்தில் பேராசிரியராக பணியாற்றியவர் அகோய்ஜாம். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த இவர், அங்குள்ள இன்னர் மணிப்பூர் லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.,யாகவும் உள்ளார்.
கடந்த மே மாதம் இவர் மீது பல்கலை உள்விவகாரக் குழுவிடம், 11 மாணவியர் பாலியல் புகார் அளி த்தனர். இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணை யில், புகார் உறுதியானதைத்தொடர்ந்து பல்கலை நிர்வாகம், அவரை பணி நீக்கம் செய்தது.
இதைத்தொடர்ந்து, பேராசிரியர் அகோய்ஜாமை எம்.பி., பதவியில் இருந்து இடைநீக்கம் செய்ய வலியுறுத்தி, பா.ஜ., மகளிரணி தலைவர் ரூப் குமாரி சவுத்ரி தலைமையில் 15 பேர் அடங்கிய எம்.பி.,க்கள் குழு, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
மேலும்
-
மேலுாரை வறட்சி பகுதியாக அறிவிக்கணும்: விவசாயிகள் வலியுறுத்தல்
-
தாய்மாமன் தங்க மோதிரம் 110 குழந்தைகளுக்கு வழங்கல்
-
மயில்களின் பெருக்கம் ‘நரி’ இல்லாதது காரணம்
-
தினமலர் எதிரொலி கணித பூங்கா பிரச்னைக்கு கிடைத்து விட்டது தீர்வு
-
560 கிலோ பட்டாசு பறிமுதல்
-
பட்டாபிராமில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்