உலக செய்தி சில வரிகளில்
டென்மார்க்
பலவீனமான `பாஸ்வேர்டால்'
குடிமக்கள் தகவல்கள் திருட்டு
கோபன்ஹேகன்: டென்மார்க்கில் உலகளவில் பலவீனமான மற்றும் பரவலாக பயன்படுத்தக்கூடிய ‘பாஸ்வேர்டு’ எனப்படும் கடவுச்சொல்லான, `123456' பயன்படுத்தியதன் விளைவாக மிகப்பெரிய தகவல் திருட்டு நடந்துள்ளது.
ஐரோப்பிய நாடான டென்மார்கின் புனென் தீவில் உள்ள ‘பேஸ் ஆப்ஸ்’ என்ற சிறிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு, சி.பி.ஆர்., எனப்படும் மத்திய குடிமக்கள் தனிப்பட்ட தகவல்கள் தளத்தில் இருந்து தகவல்களை தேடவும், தகவல்களை புதுப்பிக்கவும் முறையான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அந்நிறுவனத்தின் நிர்வாக கணக்கு உட்பட குறைந்தது மூன்று கணக்குகளின் பாஸ்வேர்டு எனப்படும் கடவுச் சொல் உலகளவில் பலவீனமானதாகவும், பரவலாக பயன்படுத்தக்கூடியதுமான 123456 என்ற எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கடவுச்சொல் கசிந்ததையடுத்து, இணைய திருடர்கள் இதைப் பயன்படுத்தி, 21 நாட்களுக்கு மேலாக அந்நாட்டு மக்களின் தனிப்பட்ட தகவல்ளை திருடியது கண்டறியப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக 1.4 கோடி முறை தேடப்பட்டதற்கான கட்டணத் தொகை வந்தப் பிறகே இந்த திருட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும்
-
மேலுாரை வறட்சி பகுதியாக அறிவிக்கணும்: விவசாயிகள் வலியுறுத்தல்
-
தாய்மாமன் தங்க மோதிரம் 110 குழந்தைகளுக்கு வழங்கல்
-
மயில்களின் பெருக்கம் ‘நரி’ இல்லாதது காரணம்
-
தினமலர் எதிரொலி கணித பூங்கா பிரச்னைக்கு கிடைத்து விட்டது தீர்வு
-
560 கிலோ பட்டாசு பறிமுதல்
-
பட்டாபிராமில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்