நஞ்சுண்டாபுரம் அபார்ட்மென்டில் குடிநீர் இணைப்பு வழங்க உத்தரவு
நஞ்சுண்டாபுரம்: ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் தனியார் நிறுவனம் அபார்ட்மென்ட், தனி வீடுகள் அமைத்துள்ளது. அதில் உள்ள தனி வீடுகளுக்கு 25 ஆண்டுகளாக மாநகராட்சி குடிநீர் இணைப்பு வழங்கவில்லை.
இதுகுறித்து இங்குள்ள ஒரு குடியிருப்புவாசி சார்பில், சென்னை ஐகோர்ட்டில் கடந்தாண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் சந்தன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், கட்டுமான நிறுவனம் அதிக விலைக்கு தண்ணீர் விற்க வேண்டும் என்பதற்காக, மாநகராட்சியின் குடிநீர் இணைப்பை வழங்க விடவில்லை. நாங்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மாநகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு சாதகமாக இருந்தது.
இதே பகுதியில் அரசியல் செல்வாக்குள்ள வி.ஐ.பி.களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டம் அனைவருக்கும் சமம். தகுதியுள்ள அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.
மாநகராட்சி சார்பில், அது தனியார் ரோடு. அனுமதியற்ற மனைப்பிரிவில் உள்ள ரோட்டை மாநகராட்சியிடம் ஒப்படைக்கவில்லை. அதனால் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை என கூறியது.
அதற்கு மனுதாரர், எங்கள் மனையை வரன்முறைப்படுத்தியுள்ளோம். சொத்துவரி கட்டி வருகிறோம். விதிப்படி தனி மனைகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அருகில் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து, அங்கு குடிநீர் இணைப்பு வழங்கியிருந்தால், மனுதாரருக்கு 4 வாரங்களில் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.
மேலும்
-
மேலுாரை வறட்சி பகுதியாக அறிவிக்கணும்: விவசாயிகள் வலியுறுத்தல்
-
தாய்மாமன் தங்க மோதிரம் 110 குழந்தைகளுக்கு வழங்கல்
-
மயில்களின் பெருக்கம் ‘நரி’ இல்லாதது காரணம்
-
தினமலர் எதிரொலி கணித பூங்கா பிரச்னைக்கு கிடைத்து விட்டது தீர்வு
-
560 கிலோ பட்டாசு பறிமுதல்
-
பட்டாபிராமில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்