ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி பள்ளியில் வாழ்க்கையில் வெல்லும் கல்வி முன்னெடுப்பு

திருப்பூர்: அவிநாசியில் உள்ள ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி சீனியர் செகண்டரி பள்ளியில் மதிப்பெண்களை கடந்து, வாழ்க்கையில் வெல்லும் கல்வியும், வளர்ச்சியில் தனித்துவமான முன்னெடுப்பை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து, பள்ளி செயலாளர் அகஷ்யா விக்ரம் கூறியதாவது:

ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி சீனியர் செகண்டரி பள்ளியில் உண்மையான கல்வி என்பது, வகுப்பறையின் நான்கு சுவர்களுக்கு அப்பாற்பட்டு உள்ளது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதனடிப்படையில், எங்களது பள்ளி, 360 டிகிரி குழந்தை வளர்ச்சி கல்வி மாதிரியை உருவாக்கியுள்ளது. இது ஒவ்வொரு மாணவரின் அறிவு, உடல் நலம், மனநலம், சமூகம் மற்றும் ஒழுக்க நெறிகளை உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சியை நோக்கமாக கொண்ட ஒரு அணுகுமுறை.

கல்வி மதிப்பெண்களை மட்டுமே இலக்காக கொள்ளாமல், ஒரு குழந்தையின் ஆளுமை மற்றும் திறன்களின் ஒவ்வொரு பரிமாணத்தையும், வளர்க்கிறது. புத்தக கல்வியுடன் அனுபவபூர்வமான கற்றல், கலைகள், உடற்பயிற்சி, மனநலம் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, குழந்தைகள் வெறுமனே படிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையில் சிறந்து விளங்க கூடிய சூழலை நாங்கள் உருவாக்குகிறோம்.

எங்களது பாடத்திட்டம் வலுவான அடிப்படை அறிவையும், நவீன கற்பித்தல் முறைகளையும் ஒருங்கிணைக்கிறது. ரோபோடிக்ஸ், கோடிங் போன்ற பாடத்திட்டங்கள், டிஜிட்டல் வகுப்பறைகள், நவீன அறிவியல், தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் செயல்முறை கற்றல் திட்டங்கள் வாயிலாக மாணவர்களின் சிந்தனை திறனையும், ஆராய்ச்சி மனப்பான்மையையும் துாண்டுகிறோம்.

அனைவருக்கும் விளையாட்டு, யோகா மற்றும் தற்காப்பு கலைகளில் முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக மாணவர்கள் விளயைாட்டு, குழுப்பணி, ஒழுக்கம் மற்றும் மனஉறுதியை கற்று கொள்கின்றனர். தினசரி தியான பயிற்சி, வாழ்க்கை திறன் வகுப்பு மற்றும் வழிகாட்டு வகுப்பு வாயிலாக நேர்மை, சகோதரத்துவம், தேசபக்தி, சுற்றுசூழல் விழிப்புணர்வு போன்ற மதிப்புகளை மாணவர்களிடம் விதைக்கிறோம். சமூக சேவை திட்டங்கள் வாயிலாக சமூக பொறுப்புள்ள உலக குடிமக்களாக அவர்களை உருவாக்குகிறோம்.

ஓவியம், இசை, நடனம், நாடகம், மேடை பேச்சு போன்ற பல்துறைகளில் மாணவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து ஊக்குவிக்கிறோம். பெற்றோரின் தீவிர பங்களிப்பு இல்லாமல், சாத்தியமில்லை. கல்வியாளர்களாகிய எங்களின் முதன்மை நோக்கம் மாணவர்களை தேர்வுகளுக்கு மட்டுமல்ல, வாழ்க்கை தயார்படுத்துவதாகும்.

நாச்சம்மாள் வித்யவாணி சீனியர் செகண்டரி பள்ளியின், 360 டிகிரி மாதிரி, எங்களது மாணவர்கள் நாளை உலகை வழிநடத்தும் தலைவர்களாகவும், சாதனையாளர்களாகவும் உருவாக வழிவகுக்கும் நற்பணியாகும். ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஆற்றலை வெளிகொண்டு வந்து, தன்னம்பிக்கையுடன் கனவு காணவும், துணிவுடன் சாதிக்கவும், பொறுப்புள்ள குடிமக்களாக உயரவும் வழிகாட்டுவதே எங்கள் கல்வி பயணத்தின் உண்மையான வெற்றி.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement