வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை

தொப்பம்பட்டி: பழநி அருகே புளியம்பட்டியில் பனை ஏறும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் ரோட்டை தனிநபர்கள் ஆக்கிரமித்து கம்பிவேலி அமைத்துள்ளனர். இதனை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் அருள்செல்வம் தலைமையில் புளியம்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் செல்லமுத்து, தமிழ்நாடு விவசாய தலைவர் சங்க ஒன்றிய தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

Advertisement