கலெக்டர் உத்தரவில் டாக்டர் 'சஸ்பெண்ட்'
போடி:
தேனி மாவட்டம், போடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்த போது பணியில் இருந்த டாக்டர் பாலமுருகன் மீது மதுநெடி வீசியதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
போடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி நேற்று மாலை 5:40 மணிக்கு ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள் நோயாளிகள் விபரம், படுக்கைகள், வார்டுகள் விபரம் குறித்து பணியில் இருந்த டாக்டர் பாலமுருகனிடம் கேட்டார். டாக்டர் பாலமுருகன் மீது மதுநெடி வீசியது. இதனால் முகம் சுழித்த கலெக்டர், டாக்டர் பாலமுருகனை சஸ்பெண்ட் செய்ய மருத்துவ இணை இயக்குனருக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பாலமுருகனை தேனி மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அன்புச்செழியன் சஸ்பெண்ட் செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
-
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருடிய 5 பேர் கைது
-
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement