சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
விருத்தாசலம்: பால் ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து, புறவழிசாலை சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரத்தில் இருந்து செஞ்சி நோக்கி பால் வேன் ஒன்று நேற்று விருத்தாசலம் பொன்னேரி புறவழி சாலை வழியாக சென்றது. விருத்தாசலம் பெரியார் நகர் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சென்டர் மீடியனில் மோதி நின்றது.
சென்டர் மீடியனில் மோதி நின்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பால் வேன் தாறுமாறாக ஓடியதை பார்த்து, அவ்வழியாக பைக்கில் வந்த நபர் ஒருவர், வேன் தன் மீது மோதாமல் இருக்க, பைக்கில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினார். இதனால் அவர் லேசான காயங்களுடன் தப்பினார்.
தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் கிரேன் உதவியுடன், சென்டர் மீடியனில் சிக்கிய பால் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மேலும்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
-
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருடிய 5 பேர் கைது
-
கலெக்டர் உத்தரவில் டாக்டர் 'சஸ்பெண்ட்'
-
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்