குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியில் நடந்த மனுநீதி நாள் முகாமில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

குள்ளஞ்சாவடி அடுத்த வழுதலம்பட்டு கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில், மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. இதில் வருவாய்த்துறை சார்பில் மொத்தம், 123 பயனாளிகளுக்கும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், ரேஷன் அட்டை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, மகளிர் திட்டம், தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை மற்றும், சுகாதாரத்துறை ஆகிய, 9 துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

டிஆர்ஓ., புண்ணியகோடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisement