விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே குடியிருப்புப் பகுதியில், விதிகளை மீறி நாட்டு பட்டாசுகள் விற்பனை செய்ததை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், ஏட்டுகள் செந்தில்குமார், மணிகண்டன், பாண்டியன் உள்ளிட்ட தனிப்படை போலீசார், நேற்று மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, திருவெண்ணெய்நல்லுார் அருகே கோவுலாபுரம் கிராமத்தில், அரசு பள்ளிக்கு அருகே ஒரு குடியிருப்பு பகுதியில், அனுமதியின்றி, பாதுகாப்பற்ற முறையில் நாட்டு பட்டாசு விற்பது தெரியவந்தது. வீட்டில் சோதனையிட்டபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த, ரூ.2 லட்சம் மதிப்பிலான வானம், சரவெடி, காக்கி பட்டாசுகள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, சரவணம்பாக்கம் வி.ஏ.ஓ., பார்த்திபன் முன்னிலையில், பட்டாசுகள் கைப்பற்றப்பட்டு, திருவெண்ணெய்நல்லுார் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, பட்டாசு விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார், 47; அவரது மனைவி சத்யா,37; ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல், அருகே கொரட்டூர் கிராமத்தில், அவர்கள், சிவகாசி பட்டாசுகளை விற்க உரிமம் பெற்று பட்டாசு கடை நடத்தி வந்துள்ளனர். இடையே அங்கு ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, அந்த கட்டடத்திற்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், விதிகளை மீறி அங்கு வைத்திருந்த ரூ.2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 24 மூட்டைகளில், நாட்டு பட்டாசுகளையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை, திருநாவலுார் போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
இதன்படி, தனிப்படை போலீசார், இரு இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான நாட்டு பட்டாசுகளை பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
-
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருடிய 5 பேர் கைது
-
கலெக்டர் உத்தரவில் டாக்டர் 'சஸ்பெண்ட்'
-
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்