தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில் தசரா விழாவை முன்னிட்டு, பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்தும், கையில் காப்பு கட்டியும் விரதம் இருக்கின்றனர். இந்நிலையில், ஆத்துாரில் செயல்பட்டு வரும் சண்முகசுந்தரம் நாடார் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும், 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், காப்பு மற்றும் மாலை அணிந்து விரதம் கடைபிடிக்கின்றனர்.
நேற்று காலை, பள்ளிக்கு சென்ற மாணவ - மாணவியரை, மாலையை கழற்றுமாறும், காப்புகளை அகற்றுமாறும், பள்ளி தலைமையாசிரியர் ரஞ்சித் சிங் கூறியுள்ளார். மறுப்பு தெரிவித்த மாணவர் ஒருவரின் மாலையை, தலைமை ஆசிரியரே கழற்றியதுடன், அந்த மாணவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.இந்த விவகாரம் தொடர்பாக, மாணவ - மாணவியர், தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து, நுாற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர், நேற்று காலை பள்ளி முன் திரண்டு, தரையில் அமர்ந்து, அம்மன் பாடலை பாடியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆத்துார் போலீசார் பேச்சு நடத்தினர்.
தலைமையாசிரியர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், திடீரென துாத்துக்குடி --- திருச்செந்துார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் அறிவுறுத்தலின்படி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்னிலையில், ரஞ்சித் சிங் மன்னிப்பு கேட்டார். இருப்பினும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் தரப்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.அதன் அடிப்படையில், மத நம்பிக்கைகளை வேண்டுமென்றே அவமதித்ததாக, ரஞ்சித் சிங் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக, 90 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தெற்கே பாவாடைகள் அலும்பல் தாங்க முடியவில்லை.பிற மதங்கள் மக்கள் தொகை அதிகமானால் இது போல நடக்கும்.
தவறாகக் கருதினால் விளக்கம் கேட்கலாம் ..... வீட்டுக்கு அனுப்பலாம் .... மாலையைக் கழற்றுவது, தாக்குவது ஒரு தலைமையாசிரியரின் வேலையல்ல ..... பேட்டை தாதா போல நடந்துகொள்வது தவறு .....மேலும்
-
பைக்குகள் திருட்டு
-
21 மூட்டை நாட்டு பட்டாசு பறிமுதல் திருநாவலுார் அருகே தம்பதி கைது
-
காங்., கமிட்டி 12 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தலைவர்கள் தேர்வு
-
அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்
-
சாலைப் பாதுகாப்பு, அவசரகால நடவடிக்கை மேம்படுத்த ஒப்பந்தம்
-
விவசாய நிலங்களில் விஷக்கடி தடுப்பு அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு