விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருடிய 5 பேர் கைது

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே விவசாயி வீட்டில் 7 பவுன் நகைகள், வெள்ளி பொருட்களை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜபாண்டி. அக்.,4ல் இவரது வீட்டின் மாடி வழியாக உள்ளே நுழைந்த நபர்கள் 7 பவுன் நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், பட்டுப்புடவைகள், குத்துவிளக்கு ஆகியவற்றை திருடிச்சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், எஸ்.ஐ., வாணி தலைமையிலான போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து திருட்டில் தொடர்புடைய சித்தையன்கோட்டையை சேர்ந்த கவுதம் 25, முத்துக்குமார் 21, வீர சுரேந்தர் 21, அய்யம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் 29, சேடப்பட்டியை சேர்ந்த பெத்தணன் 20, ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Advertisement