வாழ்க்கை பயணத்துக்கு 'பிரேக்' போட்டு விட்டது அரசு: தனியார் பஸ் உரிமையாளர்கள் குமுறல்
கோவை: அரசு பஸ்களில் மகளிருக்கான வெற்றி பயண திட்டத்தால், தனியார் பஸ் உரிமையாளர்கள் கடும் வருவாய் இழப்பை சந்தித்ததோடு, பஸ் தொழிலே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழியை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் துரைகண்ணன் கூறியதாவது: வழக்கமாக தினமும் 50 சதவீதம் கலெக்சன் ஆகும். வெற்றிப்பயணம் திட்டத்துக்கு பின், 5 சதவீதம் மட்டுமே வருகிறது. 50 சதவீத கலெக்சனில் எங்களுக்கு 20 சதவீதம் லாபம் கிடைத்தது. அதை வைத்து தொழிலாளர்களுக்கு சம்பளம், பஸ் பராமரிப்பு, இன்சூரன்ஸ், சாலைவரி, பர்மிட், சீட்வரி, எப்.சி., ஆகியவற்றை கவனித்தோம்.
50 சதவீத கலெக்சன் 5 சதவீதமாக மாறியதால் வருவாயின்றி தவிக்கிறோம். பீக் ஹவர்ஸில் மட்டுமே பயணிகள் தனியார் பஸ்களை பயன்படுத்துகின்றனர். பஸ்சீட் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைவரியாக ரூ.37,000 முதல் 42,000 வரை காலாண்டு வரி செலுத்த வேண்டும். இன்சூரன்ஸ் தொகையாகஆண்டுக்கு ரூ,1,20,000 செலுத்த வேண்டும். பஸ் பராமரிப்பு செலவாக கி.மீ.,க்கு ரூ.8 ரூபாய் ஒதுக்க வேண்டும்.
புது வண்டி வாங்க, ரூ.50 லட்சம் ஆகிறது. மாதத்தவணையாக, ரூ.1.25 லட்சம் கடனாக செலுத்த வேண்டும். எப்.சி.,செய்ய ஆண்டுக்கு ரூ.1,15,000 செலுத்த வேண்டும். ஊழியர்களுக்கு சம்பளம், போனஸ், விபத்தில் சிக்கினால் அதற்கான செலவு என்று செலவு நீண்டு கொண்டே போகும்.
அரசு பஸ்சுக்கு கொடுப்பதை போன்று எங்களுக்கும் மானியம் கொடுங்கள். எங்கள் பஸ்சில் வெற்றி பயணம் தொடரட்டும் அல்லது 80 கி.மீ. வரை இயங்கும், பஸ்களை அரசுடமையாக்கி, 200 கி.மீ., தொலைவு கொண்ட வழித்தடங்களில் எங்களது பஸ்களை இயக்க வழித்தட நீட்டிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு, துரை கண்ணன் கூறினார்.
@quote@
@quote@
quoteகாந்திபுரத்திலிருந்து ஆவாரம்பாளையம் வரை ஷேர் ஆட்டோ ஓட்டுறேன். டவுன்பஸ் போகாத இடத்துக்கு எங்க வண்டி போகுது. அதனால மக்கள் நம்பி ஏறுறாங்க. ஒரு நாளைக்கு, 20 டிரிப் அடிக்கிறேன். நல்ல வருவாய் கிடைக்குது. வாடகைக்கும் டீசலுக்கும் போக 1,500 ரூபா கிடைக்கும். சில நாட்கள் 2,000 கிடைக்கும். சும்மா பொய் சொல்லக்கூடாது.
- -திருப்பதி ஷேர் ஆட்டோ டிரைவர்quote
@quote@
காலை, மாலை நேரங்களில் கல்லுாரி மாணவியர் கும்பல் கும்பலா எங்க வண்டியில ஏறுவாங்க. அது அப்படியே சொகுசு பஸ்சுக்கு மாறிடுச்சு; நாங்கள் என்னதான் ஸ்டாப்பிங்ல நிறுத்தி ஹாரன் அடிச்சாலும், ஆடியோ சத்தத்தை கூட்டினாலும் கண்டுக்க மாட்டேங்குறாங்க. திட்டமிட்டு கூட்டத்தை கலைச்சுட்டாங்க; வேதனையா இருக்கு.
- -கோகுல் தனியார் பஸ் டிரைவர்quote
@quote@
வெற்றிப்பயணத்தால் நாங்கள் நிலைகுலைந்து போனோம். ஆட்டோக்களில் பயணிக்க மக்களுக்குஆர்வம் இல்லை.அன்றாடம் 1,500 வரை வருவாய் கிடைக்கும், தற்போது 300 -500 ரூபாய் கிடைக்கிறது. வியாபாரிகள் பொருட்களை கொண்டு போய் சேர்க்கும் வேலையை கொடுக்கின்றனர். அதை செய்கிறோம். வேற வேலைக்கு போக வழியோ, மனமோ இல்லை.
- - கனகவள்ளி ஆட்டோ டிரைவர், நஞ்சப்பா ரோடு-quote @quote@
எங்க பஸ்சுக்கு முன்னாடியும், பின்னாடியும் சொகுசு பஸ்சை திட்டமிட்டு ஓட்டுறாங்க. அதுக்காக காத்திருந்து டார்கெட் பண்ணி கும்பல் கும்பலா லேடீஸ் ஏறி டிராவல் பண்றாங்க. அப்புறம் எப்படி எங்களுக்கு டிக்கெட் கலெக்சன் ஆகும். தினமும் நஷ்டத்துக்குத்தான் வண்டி ஓட்டுறோம்.
- - கவுதம் தனியார் பஸ் கண்டக்டர்quote
@quote@
அன்றாடம் கலெக்சன் ஆகும் தொகையில் இருந்து 7.5 சதவீதம் கணக்கிட்டு எங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. கலெக்சன் ஆகாவிட்டால் எங்களது நிலமையை யோசியுங்கள், நாங்கள் பஸ்கள் முழுமையாக செல்லாத வழித்தடத்தில் தான் இயக்குகிறோம். அதிலும் தற்போது வருவாய் இல்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை.
- -ஹனீஸ் மினிபஸ் கண்டக்டர்quote
@quote@
கண்டக்டரானாலும், டிரைவரானாலும் 2 நாட்கள் தொடர்ந்து பணிபுரிய வேண்டும். அதற்கு பின்பு ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் பணிக்கு வரவேண்டும். ஆனால் அது தலைகீழாக மாறி, ஒருநாள் பணிக்கு சென்றால் மறுநாள் லீவாக மாறிவிட்டது. அன்றாடம் கிடைத்த வருவாயும் பறிபோனது.
- -மகேஷ்பாபு மினிபஸ் டிரைவர்quote @quote@
கால்டாக்சிக்கள் பெரும்பாலானவை கியாசில் ஓடுகிறது. ஒரு கிலோ ரூ.97க்கு விற்கிறது. ஒரு கிலோவுக்கு 30 கி.மீ., கிடைக்கும். வண்டி ஓடினால் லாபம் கிடைக்கும். ஆனால் இப்போது வண்டி ஓடுவதே இல்லை. காஸ் வண்டியாக இருந்து பிரயோஜனமே இல்லை.
- - ஜெயசீலன் கால்டாக்சி டிரைவர், கோவைப்புதுார்quote
@quote@
கால்டாக்ஸி தொழிலை நம்பி குடும்பத்தை காப்பாற்றுவது ரொம்ப கஷ்டமாகி விட்டது. கலெக் ஷன் அடிப்படையில், 30 சதவீத கமிஷன்தான் எங்களது சம்பளம். கலெக்சனே ஆகாவிட்டால் வெறும் கையோடு தான் வீட்டுக்கு போக வேண்டும். எப்படி குடும்பத்தை காப்பாற்றுவது என தெரியவில்லை.
- - பிரகாஷ் கால்டாக்ஸி டிரைவர், பெ.நா.பாளையம்quote @quote@
கால்டாக்ஸிகளை விவரமில்லாதவர்கள் கூட புக் செய்து பயணித்தனர். தற்போது புக்கிங்கே வருவதில்லை. எல்லோரும் சொகுசு பஸ்ஸில் பயணிக்க துவங்கிவிட்டனர். யாரும் பணம் கொடுத்து பயணிக்க விரும்புவதில்லை. பஸ்ஸில் பயணிக்க முடியாது என்ற கட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே அழைக்கின்றனர். அதனால் எங்களுக்கு பயனில்லை.
- - ஈஸ்வரன் கால்டாக்சி டிரைவர், ராமநாதபுரம்quote @quote@
தினமும் 300 ரூபாய் ஆட்டோவுக்கு வாடகை கொடுக்கணும். அதுக்கு காஸ் அடிக்கனும். அதுக்கப்புறம் சம்பாதிக்கறது தான் எனக்கு. நகைப்பட்டறை வைத்திருந்தேன். தொழில் நொடிஞ்சு போச்சு. ஆட்டோ ஓட்டினேன். அதுவும் முடிஞ்சிருச்சு. அடுத்து செக்யூரிட்டி வேலைக்குதான் போகணும்.
- - கணேஷ் ஆட்டோ டிரைவர், அப்பநாயக்கன்பாளையம்quote
@quote@
முன்பு எப்போதாவது ஒரு நாளைக்கு வருவாய் இல்லாமல் இருக்கும். முதல் நாள் சம்பாதித்ததை வைத்து அடுத்த நாளை நகர்த்துவோம். தற்போது பெரும்பாலான நாட்கள் வருவாய் இல்லாமலே வீட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யூகிக்கவே முடியவில்லை.
- -பீட்டர், ஆட்டோ டிரைவர், காட்டூர்quote
@block_B@
சி.ஐ.டி.யு.,தொழிற்சங்க மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
வெற்றிப்பயணத்தால் அரசு போக்குவரத்தை தவிர, மற்ற பொது போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது. கோவையில் 17 அரசு பஸ் டெப்போக்கள் உள்ளன. அதிலுள்ள பல பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.அரசியலுக்காகவும், தேர்தலுக்காகவும் அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். அதனால் சாதாரண, நடுத்தர மக்கள் பாதிப்புக்குள்ளாகக்கூடாது. வெற்றிப்பயணத்தில் தொலை நோக்கு பார்வை இல்லை. அதனால் பலரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.block_B
முன்பு செய்த அடாவடியை கொஞ்சம் நினைத்து பாருங்கள். புரியும். நீங்கள் என்னவோ மக்களை காக்க வந்த தெய்வம் போலவும், மக்கள் உங்களிடம் பிச்சை எடுத்து வாழ்வது போலவும் எவ்வளவு அடாவடி செய்தீர்கள். அடுத்து, 1 ரூபாய் கட்டணம் என்றால் 2 ரூபாய் சில்லறை கொடுப்பதில்லை. கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களை மிகவும் கீழ்த்தரமாக பேசுவது. பயணிகள் உங்களுக்கு 2 ரூபாய் பிட்சை மறைமுகமாக போடுகிறார்கள். அதில் ஒரு ஷிப்ட் க்கு எவ்வளவு கொசுறு காசு கிடைக்கும். அப்போது மக்களை கொஞ்சமேநும் எண்ணி பார்த்தீர்களா? எவ்வளவு பயணிகள் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் முதல் 5 ரூபாய் வரை கொடுக்காமல் ஏமாற்றுகிறீர்கள். சில்லறையை வைத்துக்கொண்டே பிட்சை எடுப்பது. கொஞ்சம் கூட மணித் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை அதன் கர்மாதான் இது. நீங்கள் காசுக்காக மறக்கும் கூட்டம் தன. நீங்கள் ஒன்றும் பெரிய கொடைவள்ளல் இல்லை, நீங்கள் ஒரு ரூபாயை இழப்பதில்லை. அனால் மக்களிடம் எவ்வளவு பணத்தை அடாவடியாக பிடுங்குறீர்கள். அன்று மட்டும் சந்தோசமாக இருந்ததா? அது பிச்சைக்கு சமம் தானே? இனிமேலாவது சற்று மனித தன்மையோடு நடக்க முயற்சி செய்யுங்கள். ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் கருத்தாக எழுதுங்கள். ஏற்றுக்கொள்கிறேன்.
மாற்றம் ... மாற்றம் ... மாற்றம் ... மாற்றம் ... மாற்றம்.........வீர நடை போடும் தமிழ்நாடு
தொழில் போட்டி வேறு. தொழிலை கொள்கை முடிவு என்று கூறி நசுக்குவது வேறு. மாநில நிர்வாகம் நஷ்டம் இல்லாமல் வெற்றி பயணம் திட்டம் வகுக்க முடியுமா? நஷ்டம் என்றால் மக்கள் தான் வரி மூலம் ஏற்க வேண்டும். இது கொள்கை முடிவா? தனியாரில் நஷ்டம் என்றால் உரிமையாளர் மட்டும். இதனை நீதிமன்றம் கொள்கை முடிவு என்று கூறி சட்டதை அமுல்படுத்த தயங்கி எப்போதும் விலகிக்கொள்கிறது. முதலில் நீதிமன்ற வழக்கு செலவுகள் முழுவதும் வாதி, பிரதிவாதம் செய்யும் நபரிடம் வசூலிக்க வேண்டும். ஏராளமான பொய் வழக்கு. தற்போதைய நிலையில் தனியார் பஸ் நிறுவனம் சாலை வரி, காப்பீடு.. போன்ற அனைத்திலும் 100 சதவீதம் விலக்கு அளிப்பது அவசியம். மேலும் பீக் நேரங்களில் தனியார் பஸ் மட்டும். தனியார் நிறுவனம் இல்லை என்றால், அரசு முடங்கிவிடும்.
பஸ்ல சீட் போட்ருக்காய்ங்களாம் , ஒண்ணேகால் ஆளுதான் உக்கரலாம் , அதில நாலு பேரை உக்கார வைப்பாய்ங்க ,
ஸ்டாலின் ஆரம்பித்து வைத்த தற்குறித் தனம் தான் த.வெ.க.வும் செய்கிறது.பலருடைய வாழ்வாதாரம் முடிந்து விட்டது..இலவச பேருந்து வசதி நீக்க வேண்டும்..எல்லாவித அழிவுக்கும் திமுகவே மூலகாரணமாக உள்ளது.
கொஞ்ச ஆட்டமடா ஆடுனீங்க ?, ஆட்டு மந்தை மாதிரி அடைச்சிகிட்டு , டைமுக்கு வண்டிய எடுக்காமல் , அடுத்த கவர்ன்மெண்ட் வண்டி டைம் வரைக்கும் பஸ்ஸ்டான்ட் வாசலை அடிச்சிக்கிட்டு நின்னுகிட்டு , போகவும் செய்யாம நிக்கவும் செய்யாம , போலீஸ் வந்து விரட்ன பிறகு, ஹை ஸ்பீட்ல , ஹாரனை அலற விட்டுகிட்டு , ரோட்ல பறப்பீங்களாடா , ? இப்போ எத்தனை மணி நேரம் நின்னாலும் , என்னத்த பாட்டை போட்டு கூவினாலும் , எவனும் கண்டுக்க மாட்டான் ...
பஸ் பாடியை மாத்தி மணல் லாரியா ஒட்டுங்க . .. இல்லேனா கார்பொரேஷன் குப்பை வண்டியா ஓட்டலாம் , ,
புளிமூட்டமாதிரி அடைத்து கூட்டிப்போனபோது இனிச்சிதுல்ல.?..
அரசு புது பேருந்துகளை வங்காமல் இவர்களுக்கு அந்த ரூட் காலை கொடுக்கலாம். அவர்களுக்கு வேலை கொடுக்கலாம். இதற்க்கு காண்ட்ராக்ட் முறையில் செயல் படலாம். தேவை இல்லாமல் அரசு எல்லா துறை களிலும் தலை இடாமல் முக்கிய துறையில் மட்டும் அரசு இயங்கணும். அரசு புகுந்த துறையும் அமீனா புகுந்த வீடும் அழிந்து விடும் என்பார்கள்.
எதையும் சிந்திக்காமல் அள்ளித்தெளித்த கோலம் போல் செயல் படுகிறார்கள். ஆலோசனை வழங்குபவர்கள் சரியில்லை. இதனால் விஜய்க்கு கெட்ட பெயர்தான்
சாவுங்கடா குடும்பத்தோடு ஒட்டு யாருக்கு போடுவது என்று தெரியாமல் போட்டத்தின் பலன்.
மானமே இல்லாத கொத்தடிமமேலும்
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு
-
அமைச்சர் நிர்மல் குமாருக்கு ரூ.1 கேட்டு நோட்டீஸ் அனுப்பியது அதிமுக
-
ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் இரட்டை நிலைபாட்டை தவிர்க்க வேண்டும்; இந்தியா வலியுறுத்தல்
-
போதைப்பொருள் விற்பனை குறித்து புகார்; நேரலையின் போது சமூக ஆர்வலர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
5 நாள் பயணமாக இந்தியா வருகிறார் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ