போப் லியோவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை: நலமுடன் இருப்பதாக வாடிகன் தகவல்
ரோம்: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் லியோவுக்கு, ரோமில் உள்ள மருத்துவமனையில், வெற்றிகரமாக நுரையீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் பூரண நலமுடன் தேறி வருவதாக, வாடிகன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருப்பவர் போப் லியோ, வாடிகன் நகரத்தில் வசித்து வருகிறார். நுரையீரலில் அவருக்கு கட்டி இருப்பதை சமீபத்தில் டாக்டர்கள் கண்டறிந்தனர். ஆரம்ப நிலையிலேயே இது கண்டறியப்பட்டது. அதனை அகற்ற அறுவை சிகிச்சை வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக, வாடிகன் அறிவித்துள்ளது.
புற்றுநோய்:
வாடிகன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை: போப் லியோவுக்கு வலது பக்க நுரையீரலில் கட்டி இருப்பது முந்தைய பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, திட்டமிட்டபடி அதிநவீன தொழில்நுட்பம் மூலம் அவரது வலது நுரையீரலின் கீழ்ப்பகுதி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சையின்போது மேற்கொள்ளப்பட்ட திசுப் பரிசோதனையில், அவருக்கு நுரையீரல் அடினோகார்சினோமா புற்றுநோய் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையில் எந்தவித சிக்கல்களும் இன்றி மருத்துவர்கள் திறம்பட முடித்துள்ளனர்.
ஓய்வு:
அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண்விழித்து சுயநினைவுக்கு வந்த போப் லியோ, இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார். இரவு உணவருந்திய அவர், தனது தனிச் செயலாளர்கள் மற்றும் வாடிகன் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். மருத்துவமனையில், ஒருவாரம் ஓய்வில் இருக்கும் போப் லியோவுக்கு, அகற்றப்பட்ட திசுக்கள் குறித்து அடுத்த சில தினங்களில் கூடுதல் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
ஐரோப்பிய தலைவர்களுக்கு ஆன்லைன் டார்ச்சர்: எலான் மஸ்க் மீது பிரான்ஸ் பகிரங்க குற்றச்சாட்டு
-
சாலையில் ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
-
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
-
காணியாளம்பட்டி பாலிடெக்னிக்கில் 16ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
-
மின் வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
-
ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு