ஐரோப்பிய தலைவர்களுக்கு ஆன்லைன் டார்ச்சர்: எலான் மஸ்க் மீது பிரான்ஸ் பகிரங்க குற்றச்சாட்டு
பாரிஸ்: தொழிலதிபர் எலான் மஸ்க், ஐரோப்பிய தலைவர்களை குறிவைத்து இணைய வழியில் அச்சுறுத்தி வருவதாகவும், வரும் அதிபர் தேர்தலில் அந்நிய சக்திகள் தலையிட வாய்ப்புள்ளதாகவும் பிரான்ஸ் அரசு பகிரங்கமாக எச்சரித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரமாரி தாக்கு:
இதுகுறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் நோயல் பரோட் கூறியதாவது: எலான் மஸ்க் தனது எக்ஸ் சமூகவலைதளத்தின் மூலம், ஐரோப்பிய தலைவர்களுக்கு எதிராக, திட்டமிட்டு இன்டர்நெட் வழியாக அவதூறு பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார். இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்த அவர் முயற்சிக்கிறார். ஜெர்மனியில் ஏ.எப்.டி., கட்சிக்கு ஆதரவாக கருத்து பதிவிடுவதும், பிரிட்டன் விவகாரங்களில் தீவிர கருத்துக்களை பரப்புவதும் மஸ்க்கின் வழக்கமாகிவிட்டது.
தேர்தலில் தலையிட சதி?
பிரான்சில் 2027ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மதச்சார்பின்மை, இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் போன்ற தீவிர விவகாரங்களை கையில் எடுத்து, அதன் மூலம் வெறுப்புணர்வை தூண்டி, தேர்தலில் தலையிட சதி நடக்கிறது.
இறையாண்மைக்கு அச்சுறுத்தல்:
சமீபத்தில் பிரான்சில் பள்ளி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை மையமாக வைத்து ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் டிரம்பின் ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து பல்வேறு அவதூறு பிரசாரங்கள் இன்டர்நெட்டில் பரப்பப்பட்டு வருகின்றன. பிரான்சில் சட்டவிரோத குடியேற்றம் அதிகமாகிவிட்டதாக முன்னாள் அதிபர் டிரம்ப் பதிவிட, அதற்கு எலான் மஸ்க், இது மெல்ல நிகழும் ஆக்கிரமிப்பு என்றும், இதற்கு ஆதரவளிப்பவர்கள் துரோகிகள் என்றும் பதிவிட்டுள்ளார்.
எந்த நாடாக இருந்தாலும் சரி, எங்கிருந்து வந்தாலும் சரி, எங்கள் நாட்டு விவகாரங்களில் அந்நிய சக்திகள் தலையிடுவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்; இது நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயம். இவ்வாறு அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதன் நிறுவனங்கள் மூலம் தான் உலகம் முழுவதும் அறியப்பட்டது. அந்த நிறுவனங்கள் சம்பாதித்த பணத்தை வைத்து உலக மக்களுக்கு எந்த பெரிய தொல்லையும் கொடுத்ததில்லை. உலக நாடுகள் அனைத்திலும் வம்பிழுத்து வருகின்றான். உலகின் பெரும்பான்மை மக்கள் அமெரிக்காவை வெறுப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் சொல்கின்றது. இவர்கள் இப்படியே தொடர்ந்தால் அமெரிக்கா வட கொரியா போல் ஒரு தனித்து விடப்பட்ட நாடாகிவிடும்.
வெகு விரைவில் இவரும், இவர் நிறுவனங்களும் அழிந்து போவதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.
இந்த ஆளு மேல சர்வ தேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும். இன்டர்நேஷனல் ஏமாற்றுக்காரன்.
இவரும், டிரம்பும் உலகை ஆட்டி படைக்கிறார்கள். தனி மனித ஒழுக்கம் நேர்மை என்றால் என்ன என்று கேட்பவர்கள் இவர்கள் ரெண்டு பெரும். இதில் வருத்தம் என்ன என்றால் இவர்களுக்கு பெரும் அளவில் ஆதரவு உள்ளது. இப்படி சமூகம் இருக்குமா ..?, மீண்டும் கற்காலத்துக்கு போவது போல் உள்ளது. எலான் மாஸ்க்கு நன்கு மனைவிகள் 12 குழந்தைகள். படித்த மனம் மேம்பட்டவர்கள் வாழும் முறையா இது. தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற வாழ்வே இப்போ உள்ளது. டிராம்போ எப்ஸ்டீன் விபாகரத்தில் ஈடுபட்டும் ஏதும் நடக்காது போல் நடக்கிறார். இவர்களுக்கு guilt இருக்குதா..?.
ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். உலக தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
டிரம்பரின் நண்பர்....
boycott elon muskமேலும்
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு
-
அமைச்சர் நிர்மல் குமாருக்கு ரூ.1 கேட்டு நோட்டீஸ் அனுப்பியது அதிமுக
-
ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் இரட்டை நிலைபாட்டை தவிர்க்க வேண்டும்; இந்தியா வலியுறுத்தல்
-
போதைப்பொருள் விற்பனை குறித்து புகார்; நேரலையின் போது சமூக ஆர்வலர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
5 நாள் பயணமாக இந்தியா வருகிறார் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ