அமைச்சர் அருண்ராஜூக்கு இன்று பிறந்தநாள்
நாமக்கல்,:தமிழக
அரசியலில், மருத்துவ பின்னணியுடன் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளவர்
அமைச்சர் அருண்ராஜ். இவர், மருத்துவர், இந்திய வருவாய்ப்பணி அதிகாரி
என, பல பொறுப்புகளை வகித்து, தற்போது, தமிழக சுகாதாரம், மருத்துவ
கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
கடந்த,
1979 அக்., 14ல் பிறந்தார். சிறுவயது முதலே கல்வியில் ஆர்வம்
கொண்டிருந்த இவர், சென்னையில் அமைந்துள்ள மெட்ராஸ் மருத்துவ
கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றார். மருத்துவ படிப்பை
முடித்த பின், கிராமப்புற மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன்
அரசு மருத்துவ பணியில் ஈடுபட்டார்.
கடந்த, 2004 முதல், 2009
வரையிலான காலகட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம்,
தேன்கனிக்கோட்டையில் உள்ள கக்கதாசம் கிராமத்தின் அரசு ஆரம்ப
சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றினார். மருத்துவ துறையில்
பணியாற்றியதுடன், நிர்வாக துறையிலும் தன் திறமையை
வெளிப்படுத்தினார். இந்திய வருவாய்ப்பணி (ஐ.ஆர்.எஸ்.,) அதிகாரியாக
பணியாற்றிய அனுபவத்தையும் பெற்றார்.
சேவை செய்யும் நோக்கத்துடன்
அரசியல் களத்தில் ஈடுபட்ட கே.ஜி.அருண்ராஜ், தமிழகத்தில், 2026ல்
புதிதாக ஆட்சி அமைத்துள்ள, த.வெ.க., அரசில், சுகாதாரம், மருத்துவ கல்வி
மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட
செயல்பட்டு வரும் அவருக்கு, த.வெ.க.,வினர் சார்பில் பிறந்த நாள்
வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
சாலையில் ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
-
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
-
காணியாளம்பட்டி பாலிடெக்னிக்கில் 16ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
-
மின் வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
-
ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு
-
கரூர் அருகே வெவ்வேறு இடங்களில் 3 பேர் விபரீத முடிவு