சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
திருச்செங்கோடு:எலச்சிபாளையம்,
மணலி அருகே உள்ள அத்திக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ், 17; ஆட்டோ
டிரைவர்.
இவர், நேற்று முன்தினம், அப்பகுதியில் உள்ள சாக்கடையில்
பிணமாக கிடப்பதாக எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சந்தோஷ் உடலை மீட்ட போலீசார், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு
கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்தனர். இந்நிலையில், வாலிபரின்
சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை
முன் உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு
தாசில்தார் ராஜா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, சாலை
மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், பரமத்தி வேலுார் சாலையில்,
ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறப்பு 'டெட்' தகுதி தேர்வில் 1.10 லட்சம் ஆசிரியர்கள் 'பெயில்'
-
வரி விவகாரத்தில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்; ஜெய்சங்கர்
-
போப் லியோவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை: நலமுடன் இருப்பதாக வாடிகன் தகவல்
-
ஐரோப்பிய தலைவர்களுக்கு ஆன்லைன் டார்ச்சர்: எலான் மஸ்க் மீது பிரான்ஸ் பகிரங்க குற்றச்சாட்டு
-
சாலையில் ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
-
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
Advertisement
Advertisement