டிராக்டர் மோதி தொழிலாளி பலி
ப.வேலுார்:ஈரோடு
மாவட்டம், கொடுமுடியை சேர்ந்த சங்கர் மகன் விஜய், 28; கூலித்தொழிலாளி.
பாண்டமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு, நேற்று முன் தினம் மாலை,
'டி.வி.எஸ்., எக்ஸல்' மொபட்டில் சென்றார். பாண்டமங்கலம், சேவக்கட்டு
பிரிவு சாலையில் சென்றபோது, எதிரே வந்த டிராக்டர் மோதியதில் துாக்கி
வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு,
ப.வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்
உயிரிழந்தார். ப.வேலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை
ஏற்படுத்திய கரூர் மாவட்டம், மண்மங்கலத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர்
கண்ணன், 42, என்பவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிகாரத்தில் இருப்பவர்கள் திறமையானவர்களை அருகில் வைத்துக்கொள்ள விரும்பிய காலம் கடந்துவிட்டது: உயர்நீதிமன்றம் அதிருப்தி
-
தபாலில் போதை மாத்திரை வாங்கிய வாலிபர் கைது
-
இன்று (அக்.15) மின் தடை
-
சோலார் விழிப்புணர்வு
-
பிரிக்ஸ் மாநாட்டை வங்கதேசம் புறக்கணித்தது முதிர்ச்சியற்ற செயல்: 'மாஜி' பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்
-
பா.ஜ. நிர்வாகி வீடு முன் மாந்திரீக பூஜை?
Advertisement
Advertisement