எக்ஸல் கல்வி நிறுவனங்களில் மாபெரும் வர்த்தக திருவிழா
குமாரபாளையம்:குமாரபாளையம்
எக்ஸல் கல்வி நிறுவனத்துடன் இணைந்து, ஈரோடு வட்ட மேசை-98, ஈரோடு லேடீஸ்
சர்க்கிள்-78, குமாரபாளையம் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து, மாபெரும்
எக்ஸல் வர்த்தக திருவிழா-2026 இரண்டு நாட்கள் நடத்தின. மேலும்,
'ஸ்கில்ஸ் அண்ட் திரில்ஸ்-2026' என்ற பெயரில் பல்வேறு திறன் சார்ந்த
போட்டிகள் நடத்தப்பட்டன.
எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன்
தலைமை வகித்து பேசினார். துணை தலைவர் மதன் கார்த்திக், வர்த்தக
திருவிழாவில் இடம்பெற்றுள்ள பொருட்கள் மற்றும் வணிக அரங்குகளின்
சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். கல்வி நிறுவனங்களின் செயல்
இயக்குனர், எக்ஸல் பப்ளிக் பள்ளியின் இயக்குனர் கவியரசி மதன்
கார்த்திக், எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர்,
ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.தங்கவேலு அண்ட் சன்ஸ்
பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த கார்த்திகேயன், ஈரோடு
பி.என்.ஐ., அமைப்பின் நிர்வாக இயக்குனர் மகேஷ் பி.வி.கிரி, ஏரியா-7
லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பை சேர்ந்த சத்யா விக்ரம், ஈரோடு வட்ட
மேசை-98 அமைப்பினர், ஈரோடு லேடீஸ் சர்க்கிள்-78 அமைப்பினர் மற்றும்
குமாரபாளையம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர். எக்ஸல் வர்த்தக திருவிழாவில், 150-க்கும் மேற்பட்ட
வணிக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார்
பள்ளிகளைச் சேர்ந்த, 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
அதிகாரத்தில் இருப்பவர்கள் திறமையானவர்களை அருகில் வைத்துக்கொள்ள விரும்பிய காலம் கடந்துவிட்டது: உயர்நீதிமன்றம் அதிருப்தி
-
தபாலில் போதை மாத்திரை வாங்கிய வாலிபர் கைது
-
இன்று (அக்.15) மின் தடை
-
சோலார் விழிப்புணர்வு
-
பிரிக்ஸ் மாநாட்டை வங்கதேசம் புறக்கணித்தது முதிர்ச்சியற்ற செயல்: 'மாஜி' பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்
-
பா.ஜ. நிர்வாகி வீடு முன் மாந்திரீக பூஜை?