பிரிக்ஸ் மாநாட்டை வங்கதேசம் புறக்கணித்தது முதிர்ச்சியற்ற செயல்: 'மாஜி' பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்
புதுடில்லி: ''இந்தியாவில் நடந்த, 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டை வங்கதேச பிரதமர் புறக்கணித்தது முதிர்ச்சியற்ற செயல். இது வங்கதேசத்தின் நலன்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது,'' என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம் தெரிவித்துள்ளார்.
டில்லியில் கடந்த செப்., 12 மற்றும் 13 தேதிகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகள் பங்கேற்ற பிரிக்ஸ் உச்சி மாநாடு நடந்தது.
நம் நாடு தலைமை தாங்கிய இம்மாநாட்டில் பங்கேற்குமாறு, அண்டை நாடான வங்கதேசத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் அந்த அழைப்பை ஏற்க மறுத்து, மாநாட்டை புறக்கணித்தார்.
இந்நிலையில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்த விவகாரம் குறித்து கூறியதாவது:
பிரிக்ஸ் உச்சி மாநாட்டை வங்கதேசம் புறக்கணித்தது துரதிருஷ்டவசமானது. என்னை பொறுத்தவரை இது முதிர்ச்சியற்ற செயல். வங்கதேசத்தின் நலனுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு.
பிரிக்ஸ் உச்சி மாநாடு என்பது வெறுமனே துாதரக ரீதியிலான சந்திப்பு மட்டுமல்ல. வளரும் நாடுகளின் வர்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சிக்கு வாய்ப்புகளை உருவாக்கும் தளம். பிரிக்ஸ் மாநாட்டை புறக்கணித்ததன் மூலம், அந்த நல்வாய்ப்பை வங்கதேசம் இழந்துவிட்டது.
கடந்த, 1975ல் என் குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட பின், 1979ல் அப்போதைய அதிபர் ஜியாவுர் ரஹ்மான், டில்லி வந்தார். அப்போது நான் டில்லியில் தான் வசித்துக் கொண்டிருந்தேன். அவர் லண்டன் சென்றபோதும் அங்கு இருந்தேன். என் இருப்பு அவரது பயணத்தை தடுக்கவில்லை. ஆனால், தற்போது நான் டில்லியில் இருப்பதை சுட்டிக்காட்டி வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான், பிரிக்ஸ் மாநாட்டை புறக்கணித்திருப்பதை ஏற்க முடியாது.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவு என்பது, தனிநபரின் அரசியல் வெறுப்புணர்வு அடிப்படையில் தீர்மானிக்கப்பட கூடாது. பொறுப்புள்ள அரசு, நாட்டின் நலனுக்கான கதவுகளை திறந்து வைக்க வேண்டுமே தவிர, மூடக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்க நாடு இப்போ ராடிக்கல் இஸ்லாம் கண்ட்ரோல்ல இருக்கு தாயி ...... மீண்டு வருவது கடினம் ......மேலும்
-
சோலார் நிறுவன குடோனில் ரூ.1.02 கோடி காப்பர் ஒயர்கள் திருட்டு; 3 பேர் கைது
-
சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் ; எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் பதிலடி
-
வடகிழக்கு பருவமழை முதல் நாளே அமர்க்களம்: அதிக மழைப்பொழிவு எங்கே?
-
இந்திய கடற்படை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட வழக்கு; மேலும் 2 பேர் கைது
-
வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம்; ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்
-
யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்