சோலார் விழிப்புணர்வு
வடமதுரை: பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் குறித்த சோலார் விழிப்புணர்வு முகாம் வடமதுரையில் நடந்தது. வீட்டு மின் இணைப்பு வைத்திருப்போருக்காக நடந்த முகாமிற்கு செயற்பொறியாளர் முத்துபாண்டியன் தலைமை வகித்தார்.
உதவி செயற்பொறியாளர்கள் மகேஸ்வரி, கோபாலகிருஷ்ணன், சிவராமன், சுப்பிரமணி, வடமதுரை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சுமி, சரவணன் பங்கேற்றனர்.
வல்லுனர்கள் பேசுகையில், ‘சோலார் அமைக்க அரசு மானியமாக ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட்டிற்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் வழங்கப்படும். 30 நாட்களுக்கு வங்கிக்கணக்கில் மானியம் சேரும்.
கூடுதல் ஆவணங்கள் இல்லாமல் வீட்டின் மின் கட்டண ரசீது வைத்தே இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்’ என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement