சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனம் அராம்கோ தலைமையகம் மீது தாக்குதல்; தொடரும் பதற்றம்
நமது நிருபர்
சவுதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ சுத்திகரிப்பு நிலைய தலைமையகத்தின் நிர்வாக கட்டடம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சவூதி அரேபியாவின் தஹ்ரான் நகரில் அமைந்துள்ள அராம்கோ நிறுவனத்தின் தலைமையக நிர்வாகக் கட்டடம் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலின் போது, தலைமையக வளாகத்தின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
அராம்கோ நிறுவனத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் தீயை உடனடியாக அணைத்தனர். உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று சவுதி எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மற்றும் அதன் விமான நிலையங்கள் மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் இரட்டை நிலைபாட்டை தவிர்க்க வேண்டும்; இந்தியா வலியுறுத்தல்
-
போதைப்பொருள் விற்பனை குறித்து புகார்; நேரலையின் போது சமூக ஆர்வலர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
5 நாள் பயணமாக இந்தியா வருகிறார் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ
-
தடை செய்யப்பட்ட ஜந்தர் மந்தரில் நுழைந்து போராட்டம்; கரப்பான்பூச்சி அமைப்பினர் கைது
-
த.வெ.க., அரசின் ஒத்துழைப்பு குறைவால் பணிகள் மந்தம்; ஈரோடு எம்.பி., பேட்டி
-
திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த பிக்-அப் வேன்
Advertisement
Advertisement