ஏர் இந்தியா விமானத்தை கடத்த முயற்சியா? ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம்
ஜெய்ப்பூர்: ஜெர்மனியின் ப்ராங்புர்ட்டில் இருந்து டில்லி நோக்கி வந்து ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென விமானி, விமானத்தை ஹைஜேக் செய்யும் முயற்சிக்கான எச்சரிக்கையை விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்தார். இதனால், அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பு நிலவியது.
பயணிகளும் பிதிக்கு உள்ளாகினர். அதன்பிறகு, விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு, பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு விமானம் தனிமைப்படுத்தப்பட்டு, அதிகாரிகளின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கிளம்பிய புரளியின் காரணமாகவே, விமானி இந்த ஹைஜேக் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து (1)
Perumal Pillai - ,இந்தியா
14 அக்,2026 - 14:42 Report Abuse
தேச துரோகிகள் வெளிநாட்டு காரர்களிடம் காசு வாங்கிக்கொண்டு கரப்பான் பூச்சிகளை பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை விளைவிக்கக்கூடும் . எனவே ஹிட் அடித்து கரப்பான் பூச்சிகளை ஒழிக்க வேண்டும் . 0
0
Reply
மேலும்
-
அதிகாரத்தில் இருப்பவர்கள் திறமையானவர்களை அருகில் வைத்துக்கொள்ள விரும்பிய காலம் கடந்துவிட்டது: உயர்நீதிமன்றம் அதிருப்தி
-
தபாலில் போதை மாத்திரை வாங்கிய வாலிபர் கைது
-
இன்று (அக்.15) மின் தடை
-
சோலார் விழிப்புணர்வு
-
பிரிக்ஸ் மாநாட்டை வங்கதேசம் புறக்கணித்தது முதிர்ச்சியற்ற செயல்: 'மாஜி' பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்
-
பா.ஜ. நிர்வாகி வீடு முன் மாந்திரீக பூஜை?
Advertisement
Advertisement