கண்காட்சி கார்னர். இந்தியன் பிளம்பிங் கான்பரன்ஸ் & எக்ஸ்போ – 2026

சென்னை வர்த்தக மையத்தில், டிசம்பர் 17 முதல் 19ம் தேதி வரை இந்தியன் பிளம்பிங் கான்பரன்ஸ் & எக்ஸ்போ – 2026 நடைபெற உள்ளது. பிளம்பிங், நீர் மேலாண்மை, சுகாதாரம், குழாய்கள், பம்புகள், வால்வுகள், சானிட்டரி பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

என்ன பார்க்கலாம்?





குழாய்கள், பிட்டிங்ஸ், பம்புகள் மற்றும் வால்வுகள்

சானிட்டரிவேர் மற்றும் பாத்ரூம் பிட்டிங்ஸ்

நீர் சேமிப்பு மற்றும் கட்டட பிளம்பிங் தொழில்நுட்பங்கள்

யாருக்கு பயன்படும்?





பிளம்பிங் ஒப்பந்ததாரர்கள்

பொறியாளர்கள் மற்றும் கட்டட வடிவமைப்பாளர்கள்

குழாய், பம்ப், சானிட்டரி பொருள் விற்பனையாளர்கள்

என்ன பயன்?





புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறியலாம்

தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்களை நேரடியாக சந்திக்கலாம்

புதிய சந்தை மற்றும் வணிக வாய்ப்புகளை தெரிந்துகொள்ளலாம்

கண்காட்சி விபரம்





நாட்கள்: டிச.17–19, 2026

இடம்: சென்னை வர்த்தக மையம், சென்னை

அனுமதி: இலவசம்; முன்பதிவு அவசியம்

முன்பதிவு: https://indianplumbingconference.com/visitor-registration/

Advertisement