சேதமான மடைகள்,வரத்து கால்வாய்கள்: சிரமத்தில் சித்து மூன்றடைப்பு கண்மாய் விவசாயிகள்

காரியாபட்டி: துார்வாராததால் கண்மாய் மண் மேடாகி மழை நீர் தேக்க முடியாமல் வீணாகிறது. சேதமான வரத்துக்கால்வாய், மடைகளால் நீரை தேக்க முடியாமல் சித்து முன்றடைப்பு கண்மாய் பாசன விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் த வித்து வருகின்றனர்.

காரியாபட்டி சித்து மூன்றடைப்பு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 3 மடைகள் உள்ளன. 500 ஏக்கர் வரை பாசன வசதி பெற்றது. நீர் ஆதாரமாக காட்டுப்பகுதியில் பெய்யும் மழை நீர் ஓடை வழியாகவும், வக்கணாங்குண்டு கண்மாய் நிறைந்து வெளியேறும் உபரி நீரும், சென்னம்பட்டி கால்வாய் மூலமும் தண்ணீர் கிடைத்தது. ஒருமுறை நிறைந்தால் போதும், இரு போகம் விளையும், நாளடைவில் மழை பொழிவு குறைந்து வரத்து கால்வாய்கள் துார்ந்து, நீர் வரத்து இல்லாமல் போனதால் விவசாயம் செய்ய முடியாமல் தரிசாக போட்டனர். கண்மாய் தூர்வாரி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகின. தற்போது மண் மேடாகி கிடைக்கிற மழைநீரும் வீணாக வெளியேறி வருகிறது. மடைகள் சேதமடைந்தன வாய்க்கால்கள் தூர்ந்து போயின. விளைந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகின. வயல்களும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து கிடப்பதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். கண்மாயை தூர் வாரி, மடைகள், வாய்க்கால்கள், வரத்துக் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News


தூர் வார வேண்டும்:

தேவதாஸ், விவசாயி.

10 ஆண்டுகளுக்கு முன் கண்மாய் தூர் வாரப்பட்டது. தற்போது சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மண் மேடாக இருப்பதால் கிடைக்கிற மழை நீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாக வெளியேறி வருகிறது. மடைகள் சேதம் அடைந்ததால் விவசாயம் செய்ய முடியாமல் தரிசு நிலங்களாக உள்ளன. கண்மாயை தூர்வாரி மடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துார்ந்து போன

வரத்துக் கால்வாய்

பென்னி, விவசாயி.

கண்மாய்க்கு நீர் ஆதாரங்களாக பல்வேறு வரத்துக் கால்வாய்கள் உள்ளன. இருந்தும் தூர்வாராததால் சரிவர மழை நீர் கிடைக்காமல் வீணாகிறது. போதிய மழைநீரை தேக்க முடியாமல் போவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணற்று பாசனங்களும் பாதிக்கப்படுகிறது. முழு நேரமாக விவசாயம் செய்து வந்த நிலையில் தற்போது கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வரத்துக் கால்வாய்களை தூர்வாரி, வாய்க்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

Advertisement