சிதம்பரம் குறுவட்ட விளையாட்டு போட்டி: வீனஸ் பள்ளி 64 பதக்கம் வென்று அசத்தல்
சிதம்பரம்: சிதம்பரத்தில் நடந்த குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில், வீனஸ் பள்ளி மாணவர்கள் 64 பதக்கங்களை வென்றனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் நடந்த குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில் சிதம்பரம் வீனஸ் பள்ளியில் இருந்து, தடகள போட்டிகளில், மாணவர் பிரிவில், 13 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கல பதக்கம் வென்றனர். மாணவிகள் பிரிவில் 2 தங்கம், 7 வெள்ளி, 11 வெண்கல பதக்கம் பெற்று மொத்தம், 64 மாணவ, மாணவிகள் பதக்கம் வென்றனர்.
மேலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாணவர் பிரிவில் 57 பேரும், மாணவிகள் பிரிவில் 63 பேரும் சான்றிதழ் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைவர் லியோனா தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் அருண் முன்னிலை வகித்தார். வீனஸ் குழும பள்ளிகளின் நிறுவனர் குமார், தாளாளர் ரூபியால்ராணி ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். பள்ளி முதல்வர் கிருஷ்ணராஜ் நன்றி கூறினார். உடற்கல்வி ஆசிரியர் உமா, ரஞ்சித் உடனிருந்தனர்.
மேலும்
-
அதிகாரத்தில் இருப்பவர்கள் திறமையானவர்களை அருகில் வைத்துக்கொள்ள விரும்பிய காலம் கடந்துவிட்டது: உயர்நீதிமன்றம் அதிருப்தி
-
தபாலில் போதை மாத்திரை வாங்கிய வாலிபர் கைது
-
இன்று (அக்.15) மின் தடை
-
சோலார் விழிப்புணர்வு
-
பிரிக்ஸ் மாநாட்டை வங்கதேசம் புறக்கணித்தது முதிர்ச்சியற்ற செயல்: 'மாஜி' பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்
-
பா.ஜ. நிர்வாகி வீடு முன் மாந்திரீக பூஜை?