விருத்தாசலம் அரசு பள்ளியில் கோ-கோ மாநில அணி தேர்வு
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், கோ-கோ மாநில அணிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகம் முழவதும் பள்ளி கல்வி துறை சார்பில் 2026 – 27 ம் ஆண்டு கல்வியாண்டிற்கான 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான தேசிய அளவிலான கோ கோ போட்டிற்கு, 8 மண்டலமாக பிரித்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு மண்டலத்திலும் 9 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், 12 மாணவர்களை மாநில அணிக்கு தேர்வு செய்வதற்காக, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கோ கோ போட்டி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் முன்னிலையில், 12 மாணவர்கள் மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜசோழன், பிரகாசம், மனோகர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து நெரிசல்
-
மும்முனை மின் இணைப்புக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்; இருவர் கைது
-
மாவட்ட ஸ்கேட்டிங் போட்டி: மாணவர்களுக்கு பரிசளிப்பு
-
சிதம்பரம் குறுவட்ட விளையாட்டு போட்டி: வீனஸ் பள்ளி 64 பதக்கம் வென்று அசத்தல்
-
அமெரிக்க அரசியல்வாதிகளின் சொதப்பல்: இந்திய போர்க்கப்பல் படங்களை வெளியிட்டு வாழ்த்திய காமெடி
-
மாவட்ட கோகோ போட்டி: திருவள்ளுவர் பள்ளி முதலிடம்
Advertisement
Advertisement