மாவட்ட கோகோ போட்டி: திருவள்ளுவர் பள்ளி முதலிடம்
பண்ருட்டி: மாவட்ட அளவிலான கோ-கோ போட்டியில் பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்முதலிடம் பிடித்து, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவிலான கோ-கோ போட்டி, பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அதில், 17 வயதுகுட்பட்டோர் பிரிவில் திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும், ஊக்குவித்த உடற்பயிற்சி ஆசிரியரை பள்ளி தாளாளர் சேரன் பாராட்டினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement