மாநில தடகள போட்டிக்கு பண்ருட்டி மாணவர்கள் தேர்வு

பண்ருட்டி: கடலுார் மாவட்ட அளவிலான தடகள போட்டியில் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

கடலூர் மாவட்ட அளவில் நடந்த தடகளப் போட்டியில் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் கோடீஸ்வரன் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் 3000 மீட்டர் ஓட்ட போட்டியில் முதலிடம் பெற்றார். 800 மீட்டர் ஓட்ட போட்டியில் இரண்டாம் இடமும், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்ட போட்டியில் 2ம் இடம் பிடித்த மாணவன் கோடீஸ்வரன் சேலத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.மாணவர் வசீகரன் 17 வயதுக்கு உட்பட்ட தத்தி தாவுதல் போட்டியில் 3ம் இடம் பெற்றார். மாநில அளவில் தகுதி பெற்ற கோடீஸ்வரன் மாணவனை சி.இ.ஒ., மகாலட்சுமி பாராட்டி, மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற வாழ்த்தினார்.

Advertisement