பெரிய கண்மாயில் ஆகாய தாமரை: ரூ. 20 லட்சம் செலவழித்தும் வீண்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் ஆகாய தாமரையை 20 லட்சம் ரூபாய் செலவில் அரைகுறையாக அகற்றியதால், தற்போது மீண்டும் அடர்த்தியாக வளர்ந்துள்ளது.
அருப்புக்கோட்டையில்நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 127 ஏக்கர் பரப்பளவில் பெரிய கண்மாய் உள்ளது. நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்தது. 300 ஏக்கருக்கு மேல் பாசன வசதி தந்தது. முறையான பராமரிப்பு இன்றி போனதால் ஆகாய தாமரைகள் சீமை கருவேலம் மரங்கள் வளர்ந்தும், கண்மாயில் சாயப்பட்டறைகளின் சாயக் கழிவுகள் விடப்பட்டும், ஒட்டுமொத்த நீரும் விஷமாகி மாறி போனது.
மார்ச் 2026 ல், 20 லட்சம் ரூபாய் செலவில் ஆகாய தாமரைகளை அகற்றும் பணி நடந்தது. போதுமான நிதி , முறையாக அகற்றாததால் மீண்டும் ஆகாய தாமரைகள் அடர்த்தியாக வளர்ந்து உள்ளது. சீமை கருவேல மரங்களையும் ஆகாய தாமரைகளையும் முற்றிலுமாக வேரோடு அழிப்பதற்கு நடவடிக்கையை நீர்வளத்துறை எடுக்க வேண்டும். மழை காலம் துவங்கிய நிலையில், உடனடியாக இந்த பணியை செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.