மாவட்ட தடகள போட்டி வடலுார் மாணவர்கள் சாதனை
வடலுார்: மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில், வடலூர் மாணவர்கள், 11 பதக்கங்களை வென்றனர்
பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள், நெய்வேலி பாரதி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் வடலூர், எஸ்.வி.எஸ்., அகாடமியை சேர்ந்த வடலூர், எஸ்.டி.ஈடன் மற்றும், நெய்வேலி, ஜவகர் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், 14 வயதினர் பிரிவில் மாணவி அருள் அரசி 600 மற்றும் 400 மீ., ஓட்டங்களில் 2 தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்றார். மாணவி பத்மபிரியா 600மீ., ஓட்டத்தில் வெண்கலம் வென்றார்.
மாணவர்களில் 17 வயதினர் பிரிவில் கிரித்திஷ் 800 மீ., ஓட்டத்தில் தங்கமும், 1,500 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார். 4க்கு 400 மீ., தொடர் ஓட்ட போட்டியில் கார்ல் ரிச், கிருத்திஷ், ராஜரிஷி ஆகியோர் வெள்ளி பதங்கமும், நீளம் தாண்டுதல் மற்றும், 100 மீட்டர் ஓட்டம் பிரிவில் மாணவி அனு வெண்கலப் பதக்கம் வென்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர் செல்வராஜ் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.