மாவட்ட எறிபந்து போட்டி: அரசுப்பள்ளி மாணவிகள் முதலிடம்
திண்டிவனம்: மாவட்ட எறிபந்து போட்டியில், அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் இடம் பிடித்தனர்.
விழுப்புரம், ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் கடந்த 13ம் தேதி, மாவட்ட வருவாய் அளவிலான எறிபந்து போட்டி நடந்தது.
இதில், 17 மற்றும், 14 வயதிற்குட்பட்ட இரு பிரிவுகளில் நடந்த போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து நுாற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில், திண்டிவனம் அருகே மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் பங்கேற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகள் மாநில அளவில் நடக்கும் எறிபந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியில் நடந்த பாராட்டுவிழாவில் தலைமையாசிரியர் செந்தில்வேலன், உடற்கல்வி ஆசிரியர்கள் சிரில்குமார், பிரகாஷ் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
இதில் உதவி தலைமை ஆசிரியர் தீபலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
அதிகாரத்தில் இருப்பவர்கள் திறமையானவர்களை அருகில் வைத்துக்கொள்ள விரும்பிய காலம் கடந்துவிட்டது: உயர்நீதிமன்றம் அதிருப்தி
-
தபாலில் போதை மாத்திரை வாங்கிய வாலிபர் கைது
-
இன்று (அக்.15) மின் தடை
-
சோலார் விழிப்புணர்வு
-
பிரிக்ஸ் மாநாட்டை வங்கதேசம் புறக்கணித்தது முதிர்ச்சியற்ற செயல்: 'மாஜி' பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்
-
பா.ஜ. நிர்வாகி வீடு முன் மாந்திரீக பூஜை?