கணவனை கொன்ற மனைவி, மைத்துனருக்கு ஆயுள் சிறை
முசாபர்நகர்: கணவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவி மற்றும் அவரது மைத்துனர் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டம், மண்டலா கிராமத்தில் வசித்தவர் ஷாகிர். இவரது மனைவி ஆஷியா. ஷாகிரின் சகோதரர் சுஹைலுடன் ஆஷியாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.
கடந்த, 2023ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி திடீரென வீட்டுக்கு வந்த ஷாகிர், ஆஷியாவும் சுஹைலும் ஒன்றாக இருந்ததை பார்த்து விட்டார். இதையடுத்து, இருவரும் சேர்ந்து ஷாகிரை கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜய்குமார், இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா, 55,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement