சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து நெரிசல்
ஊத்துக்கோட்டை: சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால், ஊத்துக்கோட்டை நகர் பகுதியில், தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தமிழக – ஆந்திர எல்லையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. இங்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.
ஊத்துக்கோட்டை – திருவள்ளூர் சாலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மின் வாரிய அலுவலகம், திருமண மண்டபங்கள் ஆகியவை உள்ளன. தினமும், 1,000த்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் மற்றும் பாதசாரிகள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலையின் இரு புறமும் ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அது மட்டுமின்றி, சாலையோர கடைகளும் அதிக அளவில் வைக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் நெரிசலில் தத்தளிக்கின்றனர்.
ஆந்திராவில் இருந்து ஆறுவழிச்சாலை வழியே வரும் கனரக வாகனங்களும், திருவள்ளூர் சாலை வழியே தான் கடக்கின்றன. இதனால் ஏற்படும் நெரிசலால், காலை, மாலை நேரங்களில் மாணவ – மாணவியர் குறித்த நேரத்திற்கு பள்ளி செல்ல முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறை, ஊத்துக்கோட்டை காவல் துறையினருக்கு புகார் கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, கலெக்டர் ஆய்வு செய்து, திருவள்ளூர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
தங்கச் சந்தையில் உலகளவில் ஜொலிக்க தயாராகும் இந்தியா
-
மதுரை மாநகராட்சியை சூழ்ந்த'ஆக்டோபஸ்' ஆக்கிரமிப்புகள்: கோவையை பாருங்க அதிகாரிகளே
-
மாநில பேட்மின்டன் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
-
விஜய் அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைக்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
-
பாதிரியாரின் ரூ.56 லட்சம் நிலையான வைப்பு நிதி சொசைட்டிக்கு சொந்தம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு