மும்முனை மின் இணைப்புக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்; இருவர் கைது
கோவை: கோவை, கிணத்துக்கடவு அடுத்த பட்டணம் கிராமத்தில் மும்முனை மின்சாரம் பெற விண்ணப்பித்த விவசாயியிடம், 7,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கமர்சியல் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், கேங்மேன் நவீன் குமார் கைது செய்யப்பட்டனர்.
கோவை, கிணத்துக்கடவு அடுத்த பட்டணம் கிராமத்தில் மும்முனை மின்சாரம் பெற விவசாயி ஒருவர் விண்ணபித்தார். புதிய மின் இணைப்பு வழங்க, தனக்கு, 7,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, கமர்சியல் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் விவசாயி இடம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பமில்லாத விவசாயி, ஊழல் தடுப்பு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அறிவுரைப்படி, விவசாயி பணத்தை கமர்சியல் இன்ஸ்பெக்டர் வேல்முருகனிடம் வழங்கினார். மறைந்திருந்த போலீசார், ரூபாய் லஞ்சம் பெற்ற கமர்சியல் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் கேங்மேன் நவீன் குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து (7)
sasikumaren - Chennai,இந்தியா
14 அக்,2026 - 22:12 Report Abuse
லஞ்சம் ஊழல் செய்பவன்களை நிரந்தர பதவி நீக்கம் செய்ய ஆனால் அரசாங்கத்திற்கு மட்டும் மறப்போம் மன்னிப்போம் இப்படி நடப்பது எதனால் லட்சத்தில் கறைபடிந்த அழுக்கு நிறைந்த உயர் அதிகாரிகள் தான் காரணம். 0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
14 அக்,2026 - 21:30 Report Abuse
எங்க ஜாக்டோ ஜியோ எங்கபக்கம் எந்த கொம்பனும் ஒண்ணும் பண்ண முடியாது உன்னால் ஆனது பார்த்துக்கோ மைண்ட் வாய்ஸ் 0
0
Reply
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14 அக்,2026 - 18:58 Report Abuse
அதிகாரிகள், ஊழியர்கள். எல்லாரும். ' ஒண்ணுக்குள். ஒண்ணுதான்' 'எங்க. ஆளையா போட்டுக்குடுத்தே. மவனே , நீ. உன். ஆயுசிலே. இந்த. இணைப்பை. வாங்கிடுவியா. பார்க்கலாம்'. என்று. கருவம். கட்டிக்கொண்டு. அழவிடுவார்கள் 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
14 அக்,2026 - 18:55 Report Abuse
விஜய் ஆட்சியில் நெஞ்சம் நிமிர், லஞ்சம் பயில். 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
14 அக்,2026 - 18:43 Report Abuse
விஜய் பெயரை இரண்டு மூணுதரம் இன்ஸ்பெக்டர் காதில் விழற மாதிரி சொல்லியிருக்கலாம். பயந்து போய் இன்ஸ்பெக்டர் லஞ்சமில்லாமல் வேலை முடித்து கொடுத்திருப்பார். 0
0
Reply
ம பு மன்னார்சாமி - ,
14 அக்,2026 - 17:01 Report Abuse
ஆனா, அந்த மின் இணைப்பு கிடைச்சுதா இல்லையானுதான் என் கேள்வி. இவன் உள்ள போய் நமக்கு வேல அகுலனா என்ன பிரயோஜனம். இவனுக்கு மாற்றாக வரவேன் நம்ம fileஅ தூக்கி பரன்ல போட்டுட்டா நம் டிங்கி அடிக்க வேண்டியதுதான். உடனே ஆ, நீ லஞ்சத்த ஊக்கபடுத்திரியானு தம்பட்டத்த தூக்கினு வந்துடாதீங்க, என் கேள்விக்கு பதில் இருந்தா மட்டும் போடுங்க. 0
0
Reply
P.sivakumar - ,
14 அக்,2026 - 16:13 Report Abuse
7000 கம்மியா இருக்கு மேலே போட்டுக்கொடுங்கன்னு கேட்டிரூப்பார் போல?
இவரு மேல போட்டுக்கொடுத்துட்டார்! 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement