மாநில பேட்மின்டன் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்

மதுரை: மதுரையில் நடந்த மாநில பூப்பந்தாட்ட போட்டியின் ஆண்கள் பிரிவில் திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழகம், மாவட்ட பூப்பந்தாட்டக் கழகம், ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய 71வது இளையோருக்கான ஜூனியர் மாநில பூப்பந்தாட்ட போட்டிகள் மதுரையில் நடந்தன. இதில் திண்டுக்கல் ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மாவட்ட பூப்பந்தாட்ட கழகத் தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். மாநிலத் தலைவர் நடேசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் விஜய் முன்னிலை வகித்தார். சி.எஸ்.ஐ., மதுரை ராமநாதபுரம் திருமண்டல பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் தேசிய கொடியேற்றி போட்டியை துவக்கி வைத்தார்.

வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்னாள் அறங்காவலர் சண்முகசுந்தரம் பரிசு கோப்பை வழங்கினார். மாநில துணைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், பூமா மருத்துவமனை டாக்டர் சீனிவாச குமார், ஸ்டான்லி ஜெயராஜ், மேரி, பிரபாகர், ராஜேஷ் கண்ணன் பங்கேற்றனர். பூப்பந்தாட்டக் கழக துணைத்தலைவர் முகமது மைதீன் நன்றி கூறினார்.

Advertisement