அரசு முறை பயணமாக டிச.,11ல் கனடா செல்கிறார் பிரதமர் மோடி
ஒட்டாவா: அண்மையில் பிரதமர் மோடியும், கனடா பிரதமர் மார்க் கார்னியும் தொலைபேசியில் பேசினர். அப்போது, வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுடபம், பாதுகாப்பு துறைகளில் இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதி எடுத்தனர். அப்போது, இருநாடுகளின் உறவு வலுவான மற்றும் ஆக்கப்பூர்வமான உத்வேகத்துடன் தொடர்வதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழலில், டிசம்பர் 11,12ம் தேதிகளில் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி கனடா செல்ல இருப்பதாக ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதகரம் தெரிவித்துள்ளது. இருநாடுகளின் தலைவர்களும் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பிரதமரின் பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2023ல் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருக்கலாம் என்று அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தால் இருநாடுகளின் உறவு மேலும் வலுப்பெறும் என்று இருநாட்டு தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
சவுதி அரேபியாவில் நீடிக்கும் பதற்றம்; அக்.,20 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து
-
சிறுமிகள் பாலியல் வழக்கு; புழல் சிறையில் வைத்து வீரமணியிடம் போலீசார் விசாரணை
-
அதிமுகவை பலவீனப்படுத்துவதிலேயே தவெக கவனம்; இபிஎஸ் குற்றச்சாட்டு
-
கோவையில் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்
-
சோலார் நிறுவன குடோனில் ரூ.1.02 கோடி காப்பர் ஒயர்கள் திருட்டு; 3 பேர் கைது
-
சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் ; எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் பதிலடி